Monday 12 October 2015

வேலாயி (வேலைக்காரி) படுத்தும் பாடு.

 எங்கள் வேலைக்காரி பெயர் வேலாயி ஆனால் அவள் பரமசிவனின் நெற்றிக்கண்ணை தன்னிடம்
வைத்துக்கொண்டுவிட்டாளோ என தோன்றும். தான் ஒத்துக்கொண்ட வேலையைத்தவிர
தப்பித்தவரி கூட ஒரு வேலை செய்துவிட மாட்டாள். அது அவள் எடுத்துக்கொண்ட சபதம் போலும்.

          காரியத்தில் மட்டும் கணக்கல்ல, வேலைக்கு வரும் நேரமும் கணக்குத்தான். சரியாக 7 மணிக்கு வந்து விடுவாள்8.30 வேலையை முடிப்பாள், 10 நிமிடம் முன்னால் முடிப்பாளே தவிர
பின்னால் போகாது
.
         வேலைசெய்யும்போது நாம் பார்க்கிறோம் என்று பார்ப்பதில் படு கெட்டிக்காரி. அதற்கே அவளுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.இரண்டு வருட அனுபவத்தில் அவள் சிரித்து நான்
பார்த்ததில்லை .( அவளுக்கு பல் இருக்கா என எனக்கே சந்தேகம்) நாம் ஏதேனும் வேலை சொன்னால் முறைப்பாள். அவளுக்கு முறைப்பதும், குறைப்பதும், கை வந்த கலை.

         அவள் வந்ததும் ஏறிய Bpஅவள் சென்றபின் normal ஆகிவிடும். அடிக்கடி என் கணவர்
அவளை தலை முழுகு என்பார். நானும் தலை முழகுவேன் , தலைக்கு ஷாம்புப்போட்டு!!!
என் கணவர் அடிக்கடி சொல்லும் சொல் " நீ எனக்குக்கூட பயப்படுவதல்லை, வேலாயியிடம் பய பக்தியோடு இருக்கிறாய்". என்பார். நான் மனதிற்குள் சொல்லிக்கொள்வேன். " அவள்என்னை விட்டுப்போய்விடுவாள்" உங்களால் போகமுடியாதே !! என.


         வேலாயி மாதம் இரண்டு நாள் leaveஎடுப்பாள். அது அவள் கேட்டுக்கொண்ட condition.
சொல்லாமல் leave எடுக்க மாட்டாள். சொன்ன நாளில் மழையோ, வெய்யிலோ, புயலோ வந்து
விடுவாள். ஆனால் ஒவ்வொரு்நாளும்  மனதால் அவளை வேலையை விட்டு நீக்கி, மறு நாள்
வறவேற்பேன்.

        உங்களுக்கு யாராவது நல்ல வேலைக்காரி  தெரிந்தால் அனுப்புங்களேன். அப்படி
அனுப்புபவர்களுக்கு ஒரு பரிசு உண்டு. அந்தப் பரிசு இந்த வேலாயிதான்!!!!!


Monday 5 October 2015

மாமாவின் மஹத்துவம்


என் அப்பாவை நாங்கள் மாமா என்றுதான் அஉழைப்போம். என் அப்பாவை பக்கத்து வீட்டுக்குழந்தைகள்மாமா என்று அழைக்க என் அண்ணாவும் அப்படியே அழைத்ததாக என் அம்மா கூறுவாள்.      மாமாவுக்கு(அப்பா) தாயாரும், இருதங்கைகளும் உண்டு. என் பாட்டியும், அத்தையும்,வந்தால்
அவர்களின் அட்டஹாஸம் சொல்லமுடியாது. தன் பிள்ளைவீட்டில் நிறைய மளிகைசாமான் இருக்கிறது என தண்ணீருக்குள் பதிலாய் எண்ணையும், நெய்யை  விட்டு உப்புமா செய்வாள் . அதில் கண்ட பலன் வேகாத உப்புமா செய்த உபத்திரவம்தான்.

     என் அம்மாவுக்கு அடிக்கடி அர்சனை கிடைக்கும். என் அம்மாவுக்கு தலையில் நிறைய மயிர்உண்டு, என் பாட்டியின் வசவு கோரமயிர் குடியைக்கெடுக்கும்என்பது. என் அத்தைக்கோ தாலிச்சரட்டைத்தாண்டாது தலை மயிர்!

எங்கள் அப்பாவுக்கு நாங்கள் 13பேர். அதில் கல்யாணவயதுவரை 
வளர்ந்தவர்கள் 9பேர். 7பிள்ளைகளும்,2பெண்களும். பெண்களைத்தவிர
7பிள்ளைகளையும், படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பிவைத்தார்
பெண்களை கல்யாணம் செய்துவைத்தார். அதற்கே அவருக்கு ஒரு 
கோயில் எழுப்பவேண்டும்!

     என்அப்பா 4குடும்பத்துக்கு ஒரு பிள்ளையாக கிராமத்தில் ராஜாமாதிரி
இருப்பாராம். அவருக்கு ஒரு ரேக்ளா வண்டி உண்டாம்( ரேக்ளா வண்டி 
ஒருவர் உட்காரும்படி,ஒரு காளையுடன் இருக்கும்). அப்பொழுது அதுதான்
Two wheeler .அவர் SSLC பாஸ் செய்து, ரயில்வே உத்தியோகம் பார்த்த
முதல் பிள்ளை என் அப்பா. English பேசத்தெரிந்தவரும் கூட!! முதலில்
Signaler , பின்booking clerk, அதன் பின் station master  ஆனார்.
அவர்  service ல் இருக்கும்பொழுது. அவருக்கு ரொம்ப நல்ல பெயர்
தன் வேலையில் பொறுப்பானவர். அவர் dutyல் இருக்கும்பொழுது
வெள்ளைப்pantம், white shirtம். Green ஜரிகைத்தொப்பியும் அவர்
கம்பீரமாய் நடந்துவருவது  கண்ணை விட்டு அகலாது. Dutyயிலிருந்து
வந்ததும், pant and shirt ஐ coat standல் மாட்டிவிட்டுத்தான் உட்காருவார்
(அப்பொழுது. Hangar எல்லாம் கிடையாது.) அவருக்கு உறுதுணையாய்
என் அம்மா குடும்பத்தை நடத்தினாள். குழந்தைகளைப்பெற்றெடுத்து,
வளர்த்து, வியாதிகளிலிருந்து எங்களை மீட்டு, சில குழந்தைகளை பறிகொடுத்து,தன் உடல் பலஹீனத்தைப்பாராட்டாமல் ஈடு கொடுத்து, குடும்பத்தை நிலை நிலைநிறுத்தியவள். என் அம்மாவுக்கு ஒரு கோடிநமஸ்க்காரம்.

         அவர். Retire ஆனதும்  தன் சம்பாத்யத்தில் வீடு வாங்கினார். எங்கள் எல்லோருக்கும் கலயாணமும் ஆயிற்று. சொந்த வீட்டில் என் அம்மாவுடன் சில காலமும், பின் பிள்ளையிடம் பல காலமும் வாழ்ந்தார்.

வயதானபின், எல்லாக்குழந்தைகளுடனும் இருப்பார்.அப்பொழுது அவர்
மிடுக்கான  நடையும், வெள்ளை வெளேறெ ன வேஷ்டியும், கை வைத்த மல்
ஜிப்பாவும்,கையில் walking stick, வெத்தலைப்பெட்டியுடன் கம்பீரமாய்
நடந்து வருவார். அவருக்கு ஒரு புத்தக வைத்திருப்பார், அதில் விகடன்,
குமுதம், தின இதழ் இவைகள் இருக்கும். News paper ல் படித்தவற்றை
Tickmark பண்ணியிருப்பார். பின் இரவுக்குள் எல்லாப்பக்கமும் படித்து
விடுவார். அதுதான் அவரின் home work!

     எல்லோரிடமும்  வரும் வழக்கப்படி என் அக்கா வீடும் செல்வார். என் 
அக்காவுக்கு 10குழந்தைகள், வாடகை வீடு ,அப்படி இருந்தும் என் அக்கா
தன் அப்பாவுக்கு படுக்க ஒரு கட்டில் கொடுத்திருப்பாள்.அவர்மதியம்
படுத்துக்கொண்டு,விகடன் படிப்பார் அப்பொழுது தூக்கம் கண்ணைச்சுழற்றும்
அப்படியும் விகடனை பையில் போட்டுவிட்டுத்தான் படுப்பார். தூக்கம் கலைந்து விடும்!ஏனென்றால் என் அக்கா குழந்தைகள் எடுத்துப்படித்து விட்டு எங்காவது வைத்துவிடுவார் கள் என   அசைக்க முடி யா த  நம் பிக்கை !

     என்னிடம் வரும் நாட்களில் நான் மதுரை, சிதம்பரம் என இருந்துவிட்டு BITS பிலானியில் இருந்தேன். என் கணவர் அங்கு prof. ஆக இருந்தார் ராஜஸ்த்தானாகருந்தாலும் பிர்லா பிலானயை ஒரு சோலை வனமாக மாற்றருந்தார். அது ஒரு அழகான காலனி .தனித்தனி பங்களா. என் அப்பா பத்து வீடு வரை நடந்து விட்டு வீட்டுக்கு வாந்ததும் என் பிள்ளையிடம் ஒரு மைல் இருக்குமா
என்பார் அதற்கு என் பிள்ளை பாலாஜி  ஐய..ஐந்து மீட்டர் கூட இருக்காது என்பான்.
இல்லை கட்டாயம் ஒரு மைல் இருக்கும் என்பார்.அவர் வயதிற்கு அது சிரம்மாய் ஒரு மைல் போல்
தெரிந்திருக்கும் போலும்.என் மைத்துனர் பிள்ளை விடுடா தாதா சந்தோஷப்பட்ட்டும் என்பான்.
என் பிள்ளை விடமாட்டான். உண்மையே பேசும் சத்யசந்தன்.(இப்பொழுதும் அவன் அப்படித்தான்)
பேச்சில் அவ்வளவு precision.

என் அப்பா காலையில் 3/4 கப் காபி. 10.30 க்குள் lunch. மதியம், 3க்கு, 1/2cup காபி. இரவு 7.30க்கு இரவு உணவு இது  தவிர ஒன்றும் சாப்பிட மாட்டார். இது அவர் 50 தாவது வயது முதல் ஏற்படுத்தக்கொண்ட கட்டுப்பாடு. யாரையும் குறைகூறமாட்டார். பிறர் யாரிடமும்உதவி பெறமாட்டர். எங்கு செல்கிறாரோ அவர்களைப்பற்றிய முழுவிபரமும் ஞாபகத்தில் வைத்திருந்து
விஜாரிக்க தவற மாட்டார். உதாரணத்துக்கு, என் கணவர் பெரிய பெரிய கணித்மேதைகளுடன்
தொடரபுகொண்டவர்.என் கணவரிடம் பேசும்போது இவருடைய நண்பர்கள் பெயரைச்சொல்லி (American name ) மறக்காமல் விஜாரிப்பார்.

95 வயது வரை எல்லோரிடமும் இருந்து, பின் சொந்த ஊர்,தான் பிறந்த இடம்
என தன் கிரம்மான மகாதானபுரத்திலற்கு வந்து தான் கட்டிய வீட்டில், என் அம்மா வாழ்ந்த
வீட்டில், மூத்த பிள்ளையிடம் தன் 95தாவது வயதில் உயிர் நீத்தார் அந்த உத்தமர்.

                                        முற்றும்