Tuesday 23 October 2018




27 PRAYERS CHOSEN BY KAMALA

1. ஶுக்லாம்பரதரம் விஷ்ணு்ம் ஶஶிவர்ணம் சதுர்புஜம். பிரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபஶாந்தயே

2.குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேஶ்வர:குருஸ்ஸாக்ஷாத் பரம் பிரம்ம 
ஸ்மைஶ்ரீ குரவே நம:

3. ஆயுர்தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி நமோஸ்துதே. அபீஷ்டம் அகிலாம் தேஹி தேஹி மே கருணாகர. ஓம் சாயா ஸம்ஞா ஸமேதஶ்ரீ ஸூர்யநாராயணஸ்வாமினே நம:

4. வேதத்தை வேதத்தின்  சுவைப்பயனைவிழுமிய முனிவர் விழுங்கும்கோது இல் இன்கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தார் தொழுதேத்தும்ஆதியை அமுதை என்னையாளுடை அப்பனை ஒப்பவர் இல்லாமாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே

5. பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
        பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
        என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீயானாய் போற்றி
        மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி .


​6. சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்..


7. நாளென்னசெய்யும் வினைதானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் ஷண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே தோன்றிடுவனே


8. தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியாமனம் தரும், தெய்வ வடிவம் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும், பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே..

9.  அருணாசல கருணாகர வருணாலய ஶரதே
தருணாருண கிரணோபம சரணாம்புஜ யுகள
ஶரணாகத ஜனபாலக துரிதாஶனி மகவன்
ஶிவஶங்கர ஶிவஶங்கர ஹர மே ஹர துரிதம்

10கிருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம்
ஜடாதரம் பார்வதீவாமபாகம்
ஸதாஶிவம் ருத்ரமனந்தரூபம்
சிதம்பரேஶம் ஹ்ருதி பாவயாமி

11. நின்றும் இருந்தும் கிடந்தும் நினைப்பது உன்னை என்றும் வணங்குவது உன் மலர்தாள் எழுதாமறையின் அன்றும் பொருளே அருளே உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே அழியா மூர்த்தி ஆனந்தமே

12. ம்ருத்யுஞ்சயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே அம்ருதேசாய ஶர்வாய மஹாதேவாய தே நம:/ ஸம்ஸாரவைத்ய ஸர்வஞ்ஞ பிஷஜமபி யோ பிஷக் / ம்ருத்யுஞ்சய: பிரஸன்னாத்மா தீர்க்கமாயு:பிரயச்சது


13. பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே

14. கலையாத கல்வியும் குறையாத வயதும் ஒருகபடு வராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழு பிணி இலா உடம்பும்
சலியாத மனமும் அன்பகலா கணவனும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகளில்லாக் கொடையும் தொலையாத நிதியும் கோணாத கோலும் ஒர் துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் படத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரோடுகூடு கண்டி,அலையாழி அறி திலும் மாயனது தங்கையே , ஆதி கடவூரின் வாழ்வேஅமுதீசர் ஒரு பாகம் அகலாத சுக்ஹா பனி, அருள்வாமி அபிராமி.

15.புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வா ஓ
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே
திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே.

16. அச்யுதானந்த கோவிந்த 
விஷ்ணோ நாராயணாம்ரித
ரோகான் மே நாஶயாஶேஷான்
ஆஶு தந்வந்தரே ஹரே 
அச்யுதானந்த கோவிந்த
நாமோச்சாரணபேஷஜாத்
நஶ்யந்தி ஸகலா ரோகா:
ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்

17. ஆதிஶக்தே ஜகன்மாத:
பக்தானுக்ரஹகாரிணீ
ஸர்வ த்ரவ்யாம்பிகே நந்தே
ஶ்ரீஸந்த்யே தே நமோஸ்துதே
த்வமேவ ஸந்த்யா காயத்ரீ
ஸாவித்ரீ ச ஸரஸ்வதீ
இதீஹ கதிதம் ஸ்தோத்ரம்
ஸந்த்யாயாம் பகு புண்யதம்
மஹாபாப பிரஶமனம் 
மஹாஸித்தி வினாயகம்


18. பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே
பின்கரந்தவளே கறைக்கண்டவனுக்கு மூத்தவளே என்றும்
மூவா முகுந்தர்க்கு இளையவளே மாத்தவளே உன்னையன்றி
மற்றுமோர் தெய்வம் வந்திப்பதே

19. உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம்உருகுமன்பு
படைத்தனை பத்மபதயுகம் சூடும் பணியெனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்

துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே

20. நீலாஞ்சன ஸமாபாஸம் 
ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்டஸம்பூதம்
தம்நமாமி ஶனைஶ்சரம்

21. கொடியே இளவஞ்சிக்கொம்பே
எனக்குவம்பே பழுத்தபடியே
மறையின் பரிமளமே பனிமேல் இமயப்பிடியே
பிரமன் முதலான தேவரைப்பெற்றஅம்மே
அடியேன் இறந்து இங்கு இனி
பிறவாமல் வந்துஆண்டு கொள்ளே

22. ஒருமையுடன் நினது திருமலரடி 
நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்றவாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிக சென்னையில் கந்தக்கோட்டத்தில்
வளர்தலமோங்கு கந்தவேலே
தன்முக துய்யமணி உன்முக
சைவமணி சண்முக தெய்வமணியே.


23. அஹம் வைஶ்வானரோ பூத்வா 
பிராணினாம் தேஹமாஶ்ரித:
பிராணாபானஸமாயுக்த:
பசாம்யன்னம் சதுர்விதம்

24. ஶுபம் கரோதி கல்யாணம்
ஆரோக்யம் தனஸம்பதா
ஶத்ருபுததி வினாஶாய
தீபஜ்யோதிர் நமோஸ்து தே
தீபஜ்யோதி:பரம் பிரம்ம 
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபம்ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே


25. ஆதி கணபதி ஆறுமுகனை அம்பிகை மணாளனை
காலபைரவர் நந்திகேசுவரர் வீரபத்ர தக்ஷிணா மூர்த்தியை
சேஷகிரி வளர்வேங்கடேசன் திருமகள் அலமேலுவை தேவி
ஸரஸ்வதி சதுர்முகப்ரம்மா ஶ்ரீ பூமிதேவி அம்மனை
அகலபுவனத்தை காத்து ரக்ஷிக்கும் அஷ்டலக்ஷ்மிநாதரை
அனுமன் பெரியதிருவடியுடன் ஆழ்வார்கள் பன்னிருவரை
அப்பர்  சுந்தரர் ஞானசம்பந்தர் அறுபத்துமூவர்களை
ஜயதேவருடன் துளஸிதாஸரை சிறந்த ஹரிபக்திமான்களை
உதயகாலத்தில் உள்ளம் தெளிந்து பரதேவி பாதகமலத்தை
தியானித்தெழுகிறேன் நமச்சிவாயவே..


26. அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார்ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்

27. மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி 
மாங்கல்யம் தேஹி மே ஸதா

Tuesday 20 February 2018

18 முழப்புடவையிலிருந்து, மிடிக்க வரை.

     நான் 12 வயது வரை Froke. ம்Bop cut மாகத்தான் இருந்தேன். என் அப்பாவின் நண்பர்களும், கூட வேலைபார்பவர்களும்,
அயல்நாட்டுக்கர்ர்களாய் இருந்ததால் அவர்களைப்போல எங்களுக்கும் Bread, Butter, Jam என Breakfast கிடைக்கும். 
அப்பொழுது Bread கேள்விப்படாத காலம். நான் கடைக்குட்டி என்பதாலும், 7 பிள்ளைகளுக்கு மத்தியில் நானும் என் அக்காவுமதான் பெண் என்பதாலும் , எனக்கு frocke   Frock தான் போட்டார்கள். ஆக, Bop cutம் Froke மாக  12 வயதுவரை இரு.ந்த எனக்கு, 13வது வயதில்தான் 
பாவாடை. தாவணி போட்டுக்கொண்டேன். என் 15வது வயதில் கல்யாணம் . என் கணவரின் படிப்பு முடிப்பதற்காக நான் என் பிறந்த வீட்டில் 
இருந்த சமயம் ,1 வருடம் சித்தாடை என்னும் 6 கஜ ப்புடவை கட்டிக்கொண்டேன் . பின் என் கணவருடன் குடும்பம் நடத்தச்சென்றபோது
அப்பொழுதுதான் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி!  “ நாளை முதல் மடிசார் கட்டிக்கொள்ளவேண்டும் என என் புகுந்த வீட்டு மனிதர்கள் சொல்ல,
நான் என்ன செய்வேன் . எனக்கு இருப்பதோ 4  கல்யாண ப்பட்டுப்புடவை. நான்  எதைக்கட்டிக்கொள்வது.? நல்ஊல வேளையாக ூ ருக்குள் இருந்த என் அம்மாவும், அக்காவும், என்னைப்பார்க்க வந்தார்கள். அப்போது என அம்மாவிடம்  விஷயத்தைச்சொன்னேன். அம்மா எனக்கு வாங்கித்தரும் நிலையில் இல்லை. என்று சொல்ல, பின் அக்கா தன்னஇடமுள்ள பணத்துடன், கடனும்வாங்கி மூன்று புடவை வாங்கினார்.ஒன்று என் அம்மாவுக்கு, ஒன்று எனக்கு , மற்றொன்று தனக்கு என்று வைத்துக்கொண்டாள். அதில் நான் ஒரு நாள் நூலபுடவையும், மறு நாள் பட்டுப்புடவையுமாய  கட்டிக்கொள்வேன். பட்டுப்புடவை  கட்டிக்கொள்ளும் நாட்களில், என்னைப்பார்ப்பவர்கள் பெரியடத்துப்பெண் என்று எண்ணலாம், ஆனால் மிகமக சாதாரணப்புடவையில்?

                                 இப்படி பல மாதங்கள் சென்றபின்  என் கணவர் சுமாரான விலையில்  இரண்டு நூல்.புடவை வாங்கிக்கொடுத்தார்.
பிற்பாடு வருடத்தில் எனக்கு இரண்டு புடவை உண்டு.!  இப்படி 18 முழப்புடவையில் 10 வருடம் கஷ்டப்பட்டேன் மதியமோ, இரவோ படுத்து எழுந்தால்
புடவை அவிழ்ந்துவிடும், அதை கட்ட அரை மணி நேரம் ஒதுக்கவேண்டும்,  பாத்ரூம் செல்வதோ கேட்கவேவேண்டாம் படு கஷ்டம் .

                          பின் என் மாமனார் காலமான பின் ( அப்பொழுது என் கடைசி குழந்தையை சுமந்துகொண்டிருந்தேன்) இவரிடம், கெஞ்சி, கூத்தாட,
அழுது, அடம்பிடித்து. 6 கஜம் புடவை கட்டிக்கொள்ள அனுமதி வாங்கினேன். அப்பொழுதும் இவர் உன்னிடம் இருக்கும் 9 கஜம் புடவையை யே 6 கஜமாக காட்டிக்கொள்என்றுவிட்டார். அப்பா. “ சாமி வரங்கொடுத்ததே”. என,  மகிழ்ந்து, சம்மதித்தேன். நானோ மிக மிக ஒல்லியாக இருப்புபேன்புடவையோ 9 கஜம் ,  நானோ 10 வருட இடைவெளிக்குப்பின் 6  கஜம் கட்டிக்கொள்ளப்போகிறேன், ஈஸ்வர என்றழைத்தேன் பின் ஈஸ்வரன் ஆண்மகன் என,ஈஸ்வரியை த்யானம் செய்து, பிரும்மப்பிரயத்தினப்பட்டு,  பத்து சுத்து சுத்தி, அதற்குள் புகுந்துகொண்டேன்!!  மறு நாள் என் சிநேகிதி சிங்காரம்என்பவள் எனக்கு உதவினாள்.அப்படி 2 வருடம் ஓடியது,  பின் இவர் 6  கஜம் புடவை வாங்கித்தர ஆரம்பித்தார்.  

          அப்படி 8 வருடம் ஓடியபின்,  US  சென்றேன் . அங்கு சில Nylon saree வாங்கினேன்.  (. அனுமதி வாங்கினேன். ,  வாங்கிக்கொடுத்தார்,
வாங்கினேன், இதிலிருந்தே  காலம் மாரியது) தெரியும்.     அங்கு 3 வருடம்  குடித்தனம் செய்தபின்  பிலானி , ராஜஸ்தான் வந்தோம், அங்கு
 பல மாகாணமக்கள்  உடை உணவு  மொழி வித்யாசம் என்று எங்களை மாற்றத்தான் செய்தது. அங்கு 23  வருட வாழ்க்கை. பின் என் கணவர் 
வேலை ஓய்வு பெற்று, சென்னை வந்தோம்.  தினமும் walk செல்வது வழக்கம் அப்படி ஒரு நாள் செல்லும்போது, கல் இடறி, புடவையும் தடுக்க,
நான் கீழே விழுந்து கை, கால் என எல்லா இடமும் பதம் பார்க்க, பின் என் குழந்தைகள் ஸல்வார் கமீஸ் போடவேண்டும் என வற்புறுத்த
நானும் சம்மதித்தேன். அப்பொழுது என் வயது 56! பின் US செல்லும்போது குளிருக்கு ஸல்வார்  கமீஸ்  குளிர் தாங்காது என Pant T shirtக்கு
மாறினேன்,  அப்பொழுது என் வயது 60 து

             என் 75 வது வயதில்  Shoping  செல்லப்புறப்பட்டால் என் கணவர் ஸல்வார் கமீஸ் போட்டுக்கொள், புடவையின் நடப்பது கஷ்டம் 
என்கிறார்!!!    என்னத்தைச்சொல்ல,  காலம் மாறிப்போச்சு !!!







      


Thursday 17 March 2016

10. சிறு வயது முதல் வாழ்க்கையின் விளிம்பு வரை.பக்கம்10

               இரவு யோஜித்து, காலை முடிவுசொல்வதாய் VK தெரிவித்தார். இரவு முழுக்க, நான் மேல் ceiling ஐப்பார்த்து, கண் கொட்டாமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன். வந்ததை எண்ணி வருந்துவதா? . வருங்காலத்தை எண்ணி பயப்படுவதாக?  அல்லது, அந்த தெய்வத்தை நொந்தார் கொள்வதா? . இரவு தேய்ந்து, பகலவன் எட்டிப்பார்த்தான். மணி 5 . படுக்கையை விட்டு எழுந்ததும்,
முதல் வேலையாய், VK என்னிடம், " நான் முடிவு செய்து விட்டேன் "என்றார். அவரை கேள்விக்குறியுடன் நோக்கினேன். ஆம், Treatment க்குத்தயார் என்றார். நான் ஒரு நிம்மதிப்பெருமூச்சு விட்டேன். முதல்நாள் நான் பட்ட அவஸ்த்தை, என் வாயால் Treatment
வேண்டாமென, சொல்லி, வபரீதமாய் ஏதாகிலும் ஆனால் என்ன செய்வது? இல்லை, Treatment
செய்து கொள்ளுங்கள், என்று சொல்ல,  இந்த வயதில், Readiation தாங்காமல் கஷ்டப்பட்டால்,
பின் வாங்கவும் முடியாதே ? என கலங்கிய எனக்கு, கடவுள் அவர் வாய் மூலம், வழி விட்டது அப்பாடா என இருந்தது. அது உடனே நீர்குமிழி மாதிரி உடைந்ததும், என் பயம் என்னைக்கவ்விக்கொண்டது. எனக்கும் சின்ன வயதல்லவே? என் வயது 80 து. எப்படி சமாளிக்கப்போகிறோமென கதி கலங்கி நின்றேன்.
                         பின் phone மூலம் குழந்தைகளுடன் மாநாடு கூட்டப்பட்டது. பின் எப்பொழுதும்போல் , அவர்கள் எனக்கு, ஆரம்ப நிலை இது அடியோடு குணமாகிவிடும், என்றும்
ஒவ்வொரு குழந்தைகளாய் வந்து என்னுடன் இருப்பது என்றும், ஏற்பாடாயிற்று, பணத்தை வாரி இறைத்து செலவழித்தார்கள். பணத்தாலும் , வைத்தியத்தாலும், உடம்பு உபாதைகளை, யாரும் வாங்கிக்கொள்ளமுடியாதே? 84வயதிலும் சற்றும்  தளறாமல், தன் கஷ்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,  ஸதா பகவான் நாமாவைச்சொல்லி , தெம்பை வரவழைத்துக்கொண்டார். அம்மா இல்லாத அவரை வளர்த்த அவர் அப்பாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்..
 வந்தவர்களின், வயிற்றுப்பாட்டைப்பார்க்கவும், வீட்டு நிர்வாகத்தை ஒட்டவும், VKயின்
உடல்நிலையை, கவனிக்கவும், என் தேகத்தைச்சாராகப்பிழிந்தேன்.( இதை என் இரண்டாவது பிள்ளை பாலாஜி, அம்மா வேலைசெய்வதை பார்க்க கஷ்டமாய் இருக்கிறது. ) என்று
சொன்னதாய்கேள்வி.அப்பாவைப்பற்றிய, கவலையும், என்னைப்பற்றி, பரிதாப்ப்டுவதுமாய்
இருந்திருக்கிறார்கள், குழந்தைகள்.  பாசமுள்ளவர் குழந்தைகளைக்கொடுத்த பகவானுக்கு,
பல கோடி நமஸ்க்காரங்கள்.

    குழந்தைகள், ஒருவர் மாற்றி ஒருவர் ஒலிம்பிக்ரேஸ்மாதிரி, வந்து செய்தார்கள். மாதங்கள்,
உருண்டோடியது. VK மிக்க பலஹீனமாய் இருந்தார். அப்பொழுது, என் அக்காவின் மரணச்செய்தி வந்து, நான் அங்கு போகமுடியாமல் இருந்தது. அப்படி இருந்தும் என் பிள்ளை பாலாஜி, அம்மா, பெரியம்மாவின் சாவுக்கு, செல்லாமல் இருந்தால், பின்னாடி அம்மா, Reagret பண்ண, நேரும்,
என்றும், தான் என்னை அழைத்துப்போவதாய் சொன்னான். அதற்கு உஷா தான் 10day அன்று,
என்னை அழைத்துப்போகிறேன் என்று , சொல்லி, செயலிலும் காட்டினாள்.

        ஆக Treatment முடிந்தாலும், Weekness பாடாய்படுத்தியது. நடக்கவே சிரம்ப்பட்டார். பின் சில மாதங்களில் துடையில் வலி வந்து, இது எதனால், வலி என புரியாமல், பின் ஆர்த்தோ
டாக்டரிடம், காண்பித்தோம். அவர் check பண்ணி எல்லாம் சரியாய் உள்ளது, வயதாகிவிட்டதால்
முடியவில்லை என்றார்.  இது அவர் சொல்லி நமக்குத்தெரியவேண்டாம். !!பின் VK யையும்,
கவனித்து,  கொண்டு வீட்டையும் நிர்வாகம் செய்வது, ரொம்ப சிரம்மாய்த்தான் இருந்தது. கொஞ்சம் திணறித்தான்போனேன்.

            தெய்வம் வழி காட்டுவார் என்று சொல்வார்கள். ஆம், VK யின் you tube lecture  போது,
ஒரு camera women வருவது வழக்கம், அடிக்கடி வருவதால், எங்களிடம் நெருக்கமாய் பழகுவாள்.
அப்படி ஒரு நாள் வந்த பொழுது, இவரைப்பார்த்து, என்ன மாமா,உங்கள் வேகமான நடை எங்கே போயிற்று,  இப்படி நடக்கிறீர்களே என்றாள்.பின்,விஷயத்தைச்சொன்னதும், அவள் எனக்கு ஒரு டாக்டர் தெரியும், ஆனால் அவரிடம், Appointment கிடைப்பது கஷ்டம், என் பாட்டியின் Appointment ஐத்தருகிறேன், நீங்கள் இஷ்டப்பட்டால் காண்பியுங்கள் என்றாள். எத்தைத்தின்னால், பித்தம்,தெளியும், என்பது போல் நானும் இவரும் அங்கு சென்றோம்.
(தொடரும்)

Wednesday 16 March 2016

9. .சிறு வயது முதல், வாழ்க்கையின் விளிம்புவரை. பக்கம் 9

                     நாங்கள் இருவரும் வயது 70 தைத்தாண்டினோம் என் குழந்தைகள் ஒரு மனதாக,
தனிமையில் சென்னையில் இருக்கக்கூடாது எனவும், எங்களிடம் வந்து விடுங்கள், எனவும்
சொன்னார்கள். நாங்கள் எங்களுக்குத்தெம்பு இருக்குமட்டும், இருவரும் குடித்தனம் செய்கிறோம் என்றதால், அவர்கள் அப்படியானால் ஏதாவது, குழந்தைகள் பக்கத்தில்தான் இருக்க வேண்டுமென்றே அன்புக்கட்டளை, போட்டதால், நாங்களும் சென்னை வீட்டை விற்று, விட்டு
பெங்களூரில் Flat வாங்கிக்கொண்டு, என் கடைசி பெண் உஷா பக்கத்திலேயே, குடி வந்தோம்.
அடிக்கடி US செல்வதும், குழந்தைகளின், பொருளாதார வளர்ச்சியையும், குடும்ப, வளர்ச்சியையும்,
பார்த்து மகழ்வோம். வாழ்க்கைச்சக்கரம் மேடுபள்ளமில்லாமல் இருக்குமா? அது மகாபாரத்த்திலேயே இல்லையே!!

           என் கணவருக்கு 82 வயதில் By pass sergery பண்ண வேண்டுமென, நிலை ஏற்பட, என்
குழந்தைகள், ஒருவர் மாற்றி ஒருவர் வந்து உதவி பணத்தையும் வாரியிரைத்து, வைத்யம் செய்ய, என் 78 வது வயதில் இவைகளை சமாளிக்க, திணறித்தான் போனேன்.  யாருக்கு இந்த மாதிரி குழந்தைகள் கிடைக்குமென,மனது, எண்ணி, தெம்பையும் கொடுத்தது. 15 வயதில் மாட்டிக்கொண்ட பந்தம், த72 வயதிலுள்ள விடவில்லை , என எதிர் நீச்சல் போட்டேன். அதிலிருந்து மீண்டு வந்து , சிலபேரன், பேத்தி, கல்யாணங்களைக் கண்டு களித்தோம். எங்கள், 8 பேரன் , பேத்திகளும்,5 கொள்ளுப்பேரன், பேத்திகளும், மட்டில்லா மகிழ்ச்சியில், திணற அடித்தார்கள்.
நிழலின் அருமை, வெயிலில், போனால்தான் தெரியும் என்பதுபோல்,  என் கணவருக்கு, எப்போதும் போல் Master checkup  செய்ய, அதில் எல்லா Reselt ம், exalend, Exalend
என்று , வர  Psa மட்டும் எண்ணிக்கையில் அதிகம் காட்ட,  biopsy எடுத்தோம்
   biopsy எடுக்கச்சுன்னார்கள், என்று சொன்னேனல்லவா, எடுத்ததில், prostaet cancer
ஆரம்ப நிலையில் இருப்பது தெரிந்தது. நிலை குலைந்துபோனோம். Prostaet cancer Docter
எங்கள் complex லேயே, வசித்து வந்ததால் சீக்கிரத்தில் opaintment கிடைத்தது.
என் பேத்தியும், அவள் கணவரும் டாக்டர்கள். உலகத்தில் 80 பது பேர்களுக்கு, இருக்கிறது,அவரகளுக்குத்தெரிவதில்லை, என்றும், இந்த வயதில் வைத்தியம் வேண்டாம்
என்றும், சொன்னார்கள்.
              இங்குள்ள  டாக்டர், treatment செய்து கொள்வதும் வேண்டாம் என்பதும் உங்கள் இஷ்டம்.
செய்து கொண்டால் இதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை, உங்கள் உடம்பு தாங்குமா?
பணச்செலவு முடியுமா? உதவிக்கு மனிதர்கள் இருக்கிறார்களா? எல்லாவற்றையும், யோஜனைசெய்து பின் வாருங்கள் என்றார்.உடனே நான் அவரை ஒரு கேள்வி கேட்டேன்.
உங்கள் அப்பாவோ அல்லது, மாமனாரோவாக, வோ இருந்தால் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?
என்று கேட்டேன். அதற்கு அவர், VKயின், உடல் நிலை ஆரோக்யமாய் உள்ளது என்றும்,
அவருக்கு vill power ம் இருக்கிறது என்றும், இந்த treatment ஐ தாங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, என்றும், இதை மேற்கொண்டால்தான் நல்லது என்பதால்  இந்த மாதிரி உடல்நிலை இருந்தால் கட்டாயம் என் உறவினராய் இருந்தால் Treatment பண்ணுவேன் என்றார். பின் வீட்டிற்கு வந்தோம்.
                இரவில் குழந்தைகள் நால்வரிடமும் பேசினோம். நால்வரும் ஏகமனதாய், பணத்தைப்பற்றியோ, மனித உதவியைப்பற்றியோ, துளிக்கூட யோஜிக்க வேண்டாம், நாங்கள் நால்வரும் தலையைக்கொடுப்போம், வைத்யமுறையில், உங்களுக்கு இருக்கும், அசௌகர்யம் பற்றி மட்டும், நீங்கள் உங்கள் விருப்பத்தைச்சொன்னால் போதும் என்றார்கள்.  கடவுளே, அடுத்த, ஜன்மம்
என்று இருப்பின், இந்தக்குழந்தைகளையே கொடு, என கண்ணீர் மல்கினேன்.அப்பாவின்
விருப்பத்திற்கு விட்டு விடுங்கள். என்றும், அதில் என் மூத்த பிள்ளை, அப்பாவின் முடிவ
சரியோ, தப்போ , எதுவானாலும், யாரும் அவரைக்குற்றம் சொல்லக்கூடாது. என்றான்.
த்த்துவமான , வார்த்தையை எவ்வளவு அழகாய் சொல்லியுள்ளான் என்  பிள்ளை!!!
( தொடரும்)

Sunday 13 March 2016

8. சிறு வயது முதல், வாழ்க்கையின் விளிம்பு வரை. பக்கம் 8

           ஆக பாஷைதெரியாத, ஊரில்,குளிர்தேசத்தில் , பெரிய பங்களாவில், குடித்தனத்தை,
ஆரம்பித்தோம்.கட்டில் முதல் கம்பளி வரை, வாங்கவேண்டியிருந்தது. வாங்க கடைக்குச்சென்றால் பாஷை? தெரியாது? சத்தத்தாலும், சைகையாலும் ஏதோ பேசி, நண்பர்களின் உதவியை
வைத்துக்கொண்டு, சமாளித்தோம். Vkக்கு சுத்த ஹிந்தி தெரியும். நடைமுறை ஹிந்தியும் மார்வாடியும்,  தெரியவேண்டுமே?

      திரும்பவும்  டியூஷன் மாஸ்டர் தேடும் படலம். குழந்தைகளுக்கு, கடவுள் புண்ணியத்தில்,
டியூஷன் ,மாஸ்டரும் கிடைத்து, குழந்தைகளை ஸ்கூலிலும் சேர்த்தாயிற்று. குடும்பம், தடையில்லாமல் ஓடினாலும், என் கஷ்டம் என்னை விடவில்லை. பாஷைதெரியாமல், வேலைக்காரியிடம் வேலை வாங்குவது, விலை வாசி உயர்வைப்போல் பயங்கரமாய் இருந்தது..  சில மாதங்களில்
நானும் ஹிந்தி பேசக்கற்றுக்கொண்டு, நிறைய friendsம் பண்ணிக்கொண்டு, lady's club ல்
ஜாங்கிரி, demonstration , செய்யும் அளவுக்கு வந்தேன். 9 வருடம் தமிழ் அஸோஸியேஷனுக்கு,
President ஆக, இருந்து, 300 பேர்களுக்கு, தீபாவளி, பொங்கல் என, சமையல் செய்து, function ஐ
நடத்தினேன்.

         23 வருடம் பிலானியில் இருந்து, நாலு குழந்தைகளும், graguvat ஆகி,மேல்நாடுகளுக்கும் சென்றார்கள் . இவரும் retired ஆனார்.1983ல் flat வாங்கி, பின் 1988 ல் குடிவந்தோம்.
அங்கு, இருதரப்பினரின் உறவுகளுடன், அவர்களைச்
  சென்று பார்ப்பதும், அவர்களை அழைத்து , விருந்தோம்பல்
செய்வதும், என 16 வருடங்கள் உருண்டோடின. இரண்டு பையன்களுக்கும் கல்யாணமாகி, பின்,
நிறைவு, பிரிவு, என, சில வருடங்கள் ஓடின.

தொடரும்



Tuesday 8 March 2016

7. சிறு வயது முதல் வாழ்க்கையின் விளிம்புவரை பக்கம் 7

   சென்ற blogல் என் பையன்கள் paper boy க இருந்த தைப்பற்றிச்சொன்னேன், இரண்டு வருட முடிவில். அவர்களைப்பற்றி News paper ல் போடுவதற்காக, interview பண்ண, வந்தார்கள். அவர்கள் paperboyயாகஇருந்து சேர்த்த பணத்தை
என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டார்கள்.  பாலாஜி,
தன் மேல்படிப்புக்காக உபயோகிப்போம் என்றான், ரவி ஊரிலிருக்கும், தன் அக்காவின் கல்யாணத்துக்கு உதவுவோம் என்றான். அது பேப்பரில் வந்து பிரபலமாய் பேசப்பட்டது. இப்படி நாட்கள் ஓடின, இந்தியாவில் விட்டு வந்த பெண்ணை நினைத்து வருந்துவதும், திரும்ப இந்தியா சென்றால் எங்கு வேலைக்குச்செல்வது என்ற, கவலையும், எங்களைத்தொத்தத்தொடங்கியது. இதற்கிடையில் எங்களுக்கு visa problem  வந்து, அதை,
Mr. Mrs Cade மூலம் ஒரு Senate Member ஆல் அதை தீர்த்துவைக்கப்பட்டது                 ( Mr and Mrs Cade பிற்காலத்தில் அவர்கள் எங்கள் குடும்பத்தில்ஒருவறானார்கள். ))

         மூன்றாவது ஆண்டு முடிவில் VK  க்கு, இந்தியாவிலிருந்து, மூன்று offers வந்தது. ஒன்று கரக்பூர் I I T யிலிருந்து., மற்றொன்று, பிலானியலிருந்து. அப்புழுது பிலானி, சாதாரணகாலேஜாக,இருந்தது. MR . GD Birla  and MIT யும் சேர்ந்து,  அதை MIT மாதிரி ஆக்கத்தீர்மானித்து, சில  expreince of American univercity prof. களை வைத்து, அந்தக்காலேஜை மாற்றி அமைக்க தீர்மானித்தார்கள். அதில் முதலாவதாக அழைக்கப்பட்ட ஆசிரியர் VK. இதற்காக அவர் MITஇல் இண்டர்வியூ செய்யப்பட்டார்.  ஆக, குடும்பத்துடன் Ford Foundation செலவில் இந்தியாவிலுள்ள,பிலானிக்கு வந்தோம். முதல் நாள் NewYork.மறு நாள் பாலைவன பிலானி!! என் அண்ணா டில்லியில் இருந்ததால்,  டில்லியிலேயே, எல்லாசாமானும் , வாங்கிக்கொண்டு, பிலானி வந்தோம். அப்பொழுது உள்ள பிலானி இப்பொழுது உள்ளது போல் அல்ல. ஒட்டகத்தைத்தவிர ஒன்றும் கிடையாது.

         திரும்ப, குழந்தைகளை எங்கு சேர்ப்பது? ஹிந்தியும்,  தெரியாது என குழப்பம். .எங்களுக்குத்தான் குழம்புவதும், தெளிவும் கை வந்த கலையாயிற்றே!!! பிர்லாவினால்,ஏற்படுத்தப்பட்ட, மிக, உயர்ந்த, இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல். School fees ம் உயர்ந்தது தான்!!
ஆனால் horse riding, swimming, என பல  வித கலைகளும் உண்டு.
பெரி ய பெண் பத்மாவை  நாங்கள் இங்கு வருமுன்னேயே இங்கு சேர்க்க ஏற்பாடு செய்திருந்தார் VK. கடிதம் மூலம் காரியத்தை முடிப்பதில் மன்னன். சென்னையில் உள்ள பெண்ணை, பிலானி காலேஜில் சேர்த்து, அந்த காலேஜ் பிரின்ஸ்பாலை, gardian ஆக, இருக்கச்சொல்லி, என் அக்காமாப்பிள்ளையை விட்டு, பிலானியில் கொண்டுவிடச்சொல்லி, அவளை மூன்று மாதம் ஹாஸ்டலில் இருக்கச்செய்தார்.இதை எழு தற எனக்கு மூச்சுமுட்டுகிறதே இவ்வளவையும் எழுத்தில் வடித்து எண்ணத்தை சாதித்த என் கணவருக்கு எத்தனை சபாஷ் போட்டாலும் தகும் !!
  இதில் எது வேண்டுமானாலும் தப்பாய் முடியலாம் . இதை இவர் சாமர்த்தியம் என்று சொல்வதா?  இல்லை, எங்கள் மூதாதையர் கள் ஆசீ என்று சொல்வதா ? இல்லை எல்லாம் வல்ல, அந்த ஈசன் செயல் என்று சொல்வதா? அந்த ஈசனுக்குத்தான் தெரியும்!!!!


  (தொடரும்)        


6. சிறுவயதுமுதல் வாழ்க்கையின் விளிம்புவரை - பக்கம் 6

அன்று TMS வீட்டில் சாப்பிட்டுவிட்டு, எங்கள் flat க்கு வந்தோம். அவர் வீட்டில் தமிழ் சாப்பாடு சாப்பிட்டதில் குழந்தைகளுக்கு ப்ரம் த்ருப்தி. குழந்தைகள் ,அப்பாவைப்பார்த்த சந்தோஷத்திலும்
வந்த களைப்பிலும் நன்றாய் தூங்கினார்கள். நானும் VK யும் விடிய, விடிய பேசிக்கொண்டிருந்தோம். ( பிரிந்தவர், கூடினால் பேசவும் வேண்டுமா) என்பது போல் நான் தனிமையில் பட்ட கஷ்டங்கள், தனியாய் பம்பாய்க்கு குழந்தைகளுடன் ரயிலிலும், பின் US க்கு
Plane னிலும் வரும் போது எனக்கு ஏற்பட்ட பயமும், அதில் ஏற்பட்ட அனுபவங்களும், எல்லாம் நான் சொல்ல, பின் VK , தான்  US ல் காலடி எடுத்து வைத்ததும் ஏற்பட்ட கலாசாரங்களின் அதிற்சியும்,பணத்துக்குப்பட்ட பாடும் , வீடு தேடும் படலம் , சமைத்துச்சாப்பிடும் கஷ்டம். இவைகளையெல்லாம்
என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

           காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு , கதவைத்திறந்தேன். ஆறு அடி உயரத்தில்அரைக்கால்சட்டை அணிந்த ஒருவரும், அவருடன் கூட, அவர் மனைவியும், கையில் பெரிய,அட்டைப்பெட்டியுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.அவர்களை எப்படி அழைப்பது என அறியாமல்,
பாதி வார்த்தயிலும், மீதி செய்கையில்மாய் அவர்களை வறவேற்தேன். உடனே VK எழுந்து வந்து,Hello, Mr & Mrs  Day என்று அவரை  வரவேற்றார். பின் தான் கொண்டு வந்திருந்த crockery s,pans, pots,Coffee perculeter, , plates,cups & saucers etc. அடங்கிய பெட்டியைஎங்களிடம்கொடுத்தார்கள். பின்  எங்களிடம் விடைபெற்றுகிளம்ம்பினார்கள்.
                     
                    VK  மறு நாள் எங்கள் எல்லோரையும் TMS காரில் shopping அழைத்துப்போனார்.குடும்பத்துக்கு வேண்டிய சாமான்களும், குழந்தைகளுக்கு வேண்டிய துணிமணிகளும் வாங்கினார்.ஆனால் இந்தியாவிலிருந்து வந்த நான் டாலரிலிருந்து, ரூபாயாக்கி, விலை என்ன என்று பார்ப்பேன். எனக்கு தூக்கிவாரப்போடும், ஐய்ய்யோ இவ்வளவு விலையாகுமா, என எடுப்பதும் வேண்டாம் என வைப்பதும அதுஇல்லாமல் குடுத்தனம் செய்ய இயலாது, என வாங்குவதுமாய்   இருந்தது.

                அடுத்த கட்டம் குழந்தைகளை ஸ்கூலில் சேர்ப்பது, குழந்தைகள் கெட்டிக்காரக்குழந்தைகளாக இருந்ததால் ஸ்கூலில் சேர்ப்பது எளிதாய் இருந்தது.ஆனால் அவர்களைக்கொண்டுவிட, கார் வேண்டுமே? VKயின் நண்பர் மூலம், ஒரு secondeCar  வாங்கினோம். அதற்கு லைஸன்ஸ் வாங்க முதல்தரம் சென்று கிடைக்கவில்லை.இரண்டாவதுதடவை சென்றார் அப்பொழுதும் அவர் பாஸ் ஆகவில்லை. மூணாவது தடவையும்
Failஆனல் பின் மூன்றுமாதத்துக்கு  லைஸன்ஸ் வாங்க  முடியாது. என்ன செய்வது என கலக்கம்பின் ஆண்டவனை நம்பி அடுத்த. Test க்குச்சென்றார். கடவுள் ்கை விடவில்லை!!!அன்று VK லைஸன்ஸ் டன் வீட்டுக்கு வந்ததும் எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி,சொல்லிலடங்கா
இனி குழந்தைகளை ஸ்கூலில் கொண்டுவிட, shopping சென்றுவர,இன்னொருவர் உதவியை நாடவேண்டாம் என்ற நிம்மதி.நாம்கஷ்டப்படும்போதுதான்  அதன் அருமை தெரியும்.


                        அடுத்த கட்டம் குழந்தைகளுக்கு ஒரு tuition masterதேடவேண்டும்,திரும்பவுமVKயின் நண்பர் மூலம்  ஏற்பாடாயிற்று. Mrs. Cade  என்பவள்.நாளை 5 மணிக்கு , குழந்தைகளுக்கு, பாடம் சொல்லிக்கொடுக்க, ஏற்பாடு செய்து விட்டு, காலேஜ் சென்றார் . மாலை ஐந்து மணி இருக்கும், ஆறு அடி உயரமும், அரை அடிக்கொண்டையும், அரை அடி high heels மாக, ஒரு பெண்மணி  ஒய்யாரமாய் நடந்து வந்தாள்.
வந்ததும், மூன்று குழந்தைகளுக்கும் மூன்று dicshenery வாங்குங்கள் என்றும், மறு நாள் ஐந்துமணிக்கு வருவதாகும், சொல்லிச்சென்றாள்.

                  இரண்டு நாள் கழித்து, காலேஜிலிருந்து இவர் phone பண்ணினார், நம் வீட்டு வழியாய் ஒரு பஸ் வரம் என்றும், , அதில் 
25 cent கொடுத்து ஏறினால், காலேஜில் இறங்கிக்கொள்ளலாம் என சொன்னார்.மனதில் தயக்கம் இருந்தாலும், தைர்யத்தை
வரவழைத்துக்கொண்டு,  குழந்தைகளை சம்த்தாய் வீட்டில் இருக்கச்சொல்லிவிட்டு, நான் பஸ் ஏறினேன். இவர் எனக்கு 25 நிமிடத்தில் வந்து சேருவாய் என்று சொல்லியிருந்தார். ஆனால் 45 நிமிடம் ஆகியும், காலேஜ்  வரவில்லை, ஆனால் பஸ் பல இடங்களில் நின்று, என் வீட்டுப்பக்கமே வந்து,நின்றது. நான் driver டம் சென்று, நான் university செல்லவேண்டும், அது இன்னும் 
வரவேயில்லையே.? என்றேன். ( இவ்வளவும் திக்கித்திணறி ஆங்கிலத்தில் கேட்பதற்குள், என் உயிரே பொய்விட்டது)
அங்கு பஸ்ஸில் கண்டெக்டர் கிடையாது. எல்லாவற்றுக்கும் driverதான்.  அதற்கு அவர் காலேஜ் போய்விட்டது என்றாரே
பார்க்கணும்.எனக்கு தூக்கிவாரிப்போட்டது. பின் நான் என்ன செய்ய, என்று பதறிப்போய்கேட்டேன். கவலைப்படாதே இந்த பஸ் சுற்றிக்கொண்டேயிருக்கும், காலேஜ்வரும்பொழுது சொல்கிறேன் இறங்கிக்கொள் என்றார். அப்பாடா என்று காலேஜ் வந்ததும்
இறங்கனேன். 

                     அது ஒரு காலேஜா, ஒரு ஊர் மாதிரி  பல மாடிக்கட்டிடங்களுடன் காட்சி அளித்தது. இவ்வளவு பெரிய இடத்தில்,
இவர்  departmentஐ கண்டுபிடித்து, அதில் இவர் roomஐ கண்டுபிடிப்பது என்பது, நடக்குமா என் எண்ணி இவரை மனதால் திட்டிக்கொண்டிருக்கும் சமயம், Hi,are you
Mrs. Krishnamurthy. ? என்றார் ஒரு 6 அடி உயரமும், அரைக்கால்சட்டையுமாக, ஆமாம் என்பதற்கு அடையாளமாய் தலையை ஆட்டினேன். பயத்தில் yes சொல்ல வாய் வரவில்லை. You want to go to your husbands room ? என்றார் yes yes என்றேன். 

அனுமன் வந்து சீதையை காப்பாத்தியமாதிரி இருந்தது. அவர் என் கையை பிடித்துக்குலுக்கி you are welcome என்றார்.
அப்பொழுது என் தேகம் பூமி வெடித்து  உள்ளே போவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. என் அப்பா அண்ணாக்கள் தவிர
என்னைத்தொட்டவர்கள் கிடையாது.அப்படி இருக்க அதிர்ந்துநின்றேன. பின் வேறு வழியில்லாமல் அவரை பின் தொடர
அவர் Dr Krishnamurthy என்று பலகை மாட்டிய அறையில் கொண்டுவிட்டார்.நான் எனக்கு ஏற்பட்ட அதிற்சியை VK யிடம்,
சொல்ல, அதற்கு இவர், இதெல்லாம் ஒருgood, experience என்றும், இங்கு கை குலுக்குவது சர்வ சாதாரணம்,இதற்கெல்லாம்
நீ அதிரக்கூடாது, நீ ஒரு அமெரிக்க யுனிவர்ஸிட்டியில் ஒரு professor ன் மனைவி என்று என்னை சமாதானப்படுத்தனார்.
இதெல்லாம் 1963ல் நடந்தது, இப்பொழுது இங்கேயே சர்வசாதாரணம். 






   குழந்தைகள் வெகு சீக்கிரம் இங்கிலீஷ் பேசவும் , படிக்கவும் கற்றுக்கொண்டு, நிறைய friendsம்பண்ணிக்கொண்டார்கள். நாங்கள் இருந்த குடியிருப்பு, post graugevat students குடியிருப்பு.ஆகையால் யாவரும் காலேஜ் students. பல தேசத்து மனிதர்கள் இருந்தார்கள். ஆதலால் என்
English ஒன்றும் மோசமாய் இல்லை. இருப்பினும் கடைகளில் சாமான்வாங்க திணறித்தான் போனேன். வீட்டில் வந்து, gramerஐப்பார்த்து, படித்துப்பழகி,வீட்டு வேலையும் படிப்புமாக இருந்தேன். ஆனால் தப்போ தவறோ, பேசி , சமாளித்து வெளிவரும் சாமர்த்தியம்எனக்கு இருந்தது.

                ஆக நாட்கள் ஓடின, எனக்கும் பல தேசத்துfriendsம் American friends, கிடைத்தார்கள்.
இதற்கிடையில் என் பையன்கள் paper boy ஆனார்கள் .paper boy என்பது தினமும், பேப்பர்
போடுவதுதான் ,ஆனால் அதை பள்ளிபையன்கள்தான் போடுவது வழக்கம். அதில் வந்து saccess
ஆனால் தனி பெருமையும்,அதில் நிறைய, custermers ஐச்சேர்த்தவர்களுக்கு, பரசுகள்,
வழங்கப்படும். அதில் என் முதல் பையன் ரவியும், இரண்டாவது பையன் பாலாஜியும் ஆளுக்கொரு
சைக்கிள் பெற்றார்கள். பின் ரவி, ஒருcontestல் Newyork world fair க்குஅழைத்துச்செல்லப்பட்டான்
அடுத்த மாதம் பாலாஜி Rose bowl என்னும் baseball என்னும் விளையாட்டு அரங்கத்திற்கு
அழைத்துச்செல்லப்பட்டான். இவைகளெல்லாம் இவர்களுக்கு, ஒரு  rech experience ஆக இருந்தது.