Thursday 17 March 2016

10. சிறு வயது முதல் வாழ்க்கையின் விளிம்பு வரை.பக்கம்10

               இரவு யோஜித்து, காலை முடிவுசொல்வதாய் VK தெரிவித்தார். இரவு முழுக்க, நான் மேல் ceiling ஐப்பார்த்து, கண் கொட்டாமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன். வந்ததை எண்ணி வருந்துவதா? . வருங்காலத்தை எண்ணி பயப்படுவதாக?  அல்லது, அந்த தெய்வத்தை நொந்தார் கொள்வதா? . இரவு தேய்ந்து, பகலவன் எட்டிப்பார்த்தான். மணி 5 . படுக்கையை விட்டு எழுந்ததும்,
முதல் வேலையாய், VK என்னிடம், " நான் முடிவு செய்து விட்டேன் "என்றார். அவரை கேள்விக்குறியுடன் நோக்கினேன். ஆம், Treatment க்குத்தயார் என்றார். நான் ஒரு நிம்மதிப்பெருமூச்சு விட்டேன். முதல்நாள் நான் பட்ட அவஸ்த்தை, என் வாயால் Treatment
வேண்டாமென, சொல்லி, வபரீதமாய் ஏதாகிலும் ஆனால் என்ன செய்வது? இல்லை, Treatment
செய்து கொள்ளுங்கள், என்று சொல்ல,  இந்த வயதில், Readiation தாங்காமல் கஷ்டப்பட்டால்,
பின் வாங்கவும் முடியாதே ? என கலங்கிய எனக்கு, கடவுள் அவர் வாய் மூலம், வழி விட்டது அப்பாடா என இருந்தது. அது உடனே நீர்குமிழி மாதிரி உடைந்ததும், என் பயம் என்னைக்கவ்விக்கொண்டது. எனக்கும் சின்ன வயதல்லவே? என் வயது 80 து. எப்படி சமாளிக்கப்போகிறோமென கதி கலங்கி நின்றேன்.
                         பின் phone மூலம் குழந்தைகளுடன் மாநாடு கூட்டப்பட்டது. பின் எப்பொழுதும்போல் , அவர்கள் எனக்கு, ஆரம்ப நிலை இது அடியோடு குணமாகிவிடும், என்றும்
ஒவ்வொரு குழந்தைகளாய் வந்து என்னுடன் இருப்பது என்றும், ஏற்பாடாயிற்று, பணத்தை வாரி இறைத்து செலவழித்தார்கள். பணத்தாலும் , வைத்தியத்தாலும், உடம்பு உபாதைகளை, யாரும் வாங்கிக்கொள்ளமுடியாதே? 84வயதிலும் சற்றும்  தளறாமல், தன் கஷ்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,  ஸதா பகவான் நாமாவைச்சொல்லி , தெம்பை வரவழைத்துக்கொண்டார். அம்மா இல்லாத அவரை வளர்த்த அவர் அப்பாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்..
 வந்தவர்களின், வயிற்றுப்பாட்டைப்பார்க்கவும், வீட்டு நிர்வாகத்தை ஒட்டவும், VKயின்
உடல்நிலையை, கவனிக்கவும், என் தேகத்தைச்சாராகப்பிழிந்தேன்.( இதை என் இரண்டாவது பிள்ளை பாலாஜி, அம்மா வேலைசெய்வதை பார்க்க கஷ்டமாய் இருக்கிறது. ) என்று
சொன்னதாய்கேள்வி.அப்பாவைப்பற்றிய, கவலையும், என்னைப்பற்றி, பரிதாப்ப்டுவதுமாய்
இருந்திருக்கிறார்கள், குழந்தைகள்.  பாசமுள்ளவர் குழந்தைகளைக்கொடுத்த பகவானுக்கு,
பல கோடி நமஸ்க்காரங்கள்.

    குழந்தைகள், ஒருவர் மாற்றி ஒருவர் ஒலிம்பிக்ரேஸ்மாதிரி, வந்து செய்தார்கள். மாதங்கள்,
உருண்டோடியது. VK மிக்க பலஹீனமாய் இருந்தார். அப்பொழுது, என் அக்காவின் மரணச்செய்தி வந்து, நான் அங்கு போகமுடியாமல் இருந்தது. அப்படி இருந்தும் என் பிள்ளை பாலாஜி, அம்மா, பெரியம்மாவின் சாவுக்கு, செல்லாமல் இருந்தால், பின்னாடி அம்மா, Reagret பண்ண, நேரும்,
என்றும், தான் என்னை அழைத்துப்போவதாய் சொன்னான். அதற்கு உஷா தான் 10day அன்று,
என்னை அழைத்துப்போகிறேன் என்று , சொல்லி, செயலிலும் காட்டினாள்.

        ஆக Treatment முடிந்தாலும், Weekness பாடாய்படுத்தியது. நடக்கவே சிரம்ப்பட்டார். பின் சில மாதங்களில் துடையில் வலி வந்து, இது எதனால், வலி என புரியாமல், பின் ஆர்த்தோ
டாக்டரிடம், காண்பித்தோம். அவர் check பண்ணி எல்லாம் சரியாய் உள்ளது, வயதாகிவிட்டதால்
முடியவில்லை என்றார்.  இது அவர் சொல்லி நமக்குத்தெரியவேண்டாம். !!பின் VK யையும்,
கவனித்து,  கொண்டு வீட்டையும் நிர்வாகம் செய்வது, ரொம்ப சிரம்மாய்த்தான் இருந்தது. கொஞ்சம் திணறித்தான்போனேன்.

            தெய்வம் வழி காட்டுவார் என்று சொல்வார்கள். ஆம், VK யின் you tube lecture  போது,
ஒரு camera women வருவது வழக்கம், அடிக்கடி வருவதால், எங்களிடம் நெருக்கமாய் பழகுவாள்.
அப்படி ஒரு நாள் வந்த பொழுது, இவரைப்பார்த்து, என்ன மாமா,உங்கள் வேகமான நடை எங்கே போயிற்று,  இப்படி நடக்கிறீர்களே என்றாள்.பின்,விஷயத்தைச்சொன்னதும், அவள் எனக்கு ஒரு டாக்டர் தெரியும், ஆனால் அவரிடம், Appointment கிடைப்பது கஷ்டம், என் பாட்டியின் Appointment ஐத்தருகிறேன், நீங்கள் இஷ்டப்பட்டால் காண்பியுங்கள் என்றாள். எத்தைத்தின்னால், பித்தம்,தெளியும், என்பது போல் நானும் இவரும் அங்கு சென்றோம்.
(தொடரும்)

No comments:

Post a Comment