Saturday 5 March 2016

5. சிறுவயதுமுதல் வாழ்க்கையின் விளிம்புவரை - பக்கம் 5

கெய்ரோ என்னும் தேசத்தில் எங்கள் எல்லோரையும் இறங்க வேண்டும் என்றும், clean செய்த பின்
உள்ளே அனுமதிப்பேன் என்று சொன்னார்கள். அப்பொழுது பாலாஜி தூங்கிக்கொண்டிருந்தான்.
Air hostess அவன் தூங்கிக்கொண்டிருக்கட்டும்  நான் பார்த்துக்கொள்கிறேன் என்றதால், ரவியையும், உஷாவையும் அழைத்துக்கொண்டு, இறங்கினேன். Mr. மஜும்தார்  எங்களுடன் வந்தார்.அவர் எங்களுடன் வந்தார் என்பதை விட நாங்கள்தான் அவருடன் சென்றோம் என்பதுதான் உண்மை.

         பின் அவர் ஒரு கடையில் சிகரெட் வாங்கி, பிரித்து, உபயோகித்தார். பின் அவர் கடைக்காரனிடம், Travelers check கொடுக்க, அதை அவன் வாங்க மறுக்க, அவன் தனக்கு டாலர்தான் வேண்டுமென தன் பாஷையில்கத்த, அவர்,பிரித்த சிகரெட்டையும் ,திருப்பிக்கொடுக்க
முடியாமல், தன்னிடம் டாலர் இல்லை என்பதை அவன் பாஷையில் சொல்லவும் முடியாமல் தவிக்க, நான் என்னிடமுள்ள, டாலரை அவருக்குக்கொடுத்து உதவினேன். ஆக அவனிடமிருந்து தப்பினோம்,  என்றும், தக்க சமயத்தில் நான் உதவியதில் உள்ள த்ருப்தியும் அவர் முகத்தில் தெரிய, எனக்கு பல பல நன்றி சொல்லி பாராட்டினார். ஆக அவர் உதவி எனக்குத்தேவைப்படும் என எண்ணிய எனக்கு என்னால் அவருக்கு உதவ முடிந்ததை , நினைத்து, சந்தோஷப்பட்டேன்.

                    பின் யாவரும் Newyork வந்தடைந்தோம். அங்கு customs clear பண்ணி, Plane மாறி சிகாகோ செல்ல வேண்டும்.அங்குதான் VK என்னை அழைத்துப்போக வருவார். ஆகையால் முன் கூட்டியே VK  தன் student மனோகர் என்பவருக்கு, என் photoe வையும், எனக்கு அவர் photoe வையும், அனுப்பி , எங்களை, ,NewYork ல் சந்திக்க வைத்தார். அவர் உதவியால் நாங்கள் Plane மாறினோம். இவ்வளவும் எழுத்தில் வடிக்கவே மூச்சுமுட்டும் எனக்கு, நடைமுறையில் எப்படி இருந்திருக்கும்!!!  ஈசன் கொடுத்த தைர்யமும், இளமை பருவ தெம்பும், என்னை, நடத்திச்சென்றது.

                         NewYork ல் Plane ஏறியதும், அப்பாடா, என்றிருந்தது. இந்தத்தடவை இறங்கும்போது VK  யை பார்த்து விடுவோம் என பெருமூச்சுவிட்டேன். கடைசியில் சிகாகோவை வந்தடைந்து, VK யையும் சந்தித்தேன்.அப்பொழுது எனக்கு ஏற்பட்டது, ஆனந்தமா அல்லது,
பொறுப்பையெல்லாம் இவரின் காலடியில் சேர்த்துவிட்ட ஆயாஸமா? அறியேன். மனமும் , உடலும் கழண்டுவிட்டது.. குழந்தைகளுக்கு  அப்பாவைப்பார்த்த. சந்தோஷம். .  அன்று, Urbana என்ற ஊருக்கு TMS என்ற சினேகிதர்  அவர் காரில் எங்களை அழைத்துச்சென்றார். பின் அவர் வீடு சென்றோம்.அவர் மனைவி தமிழ்ச்சாப்பாடு போட்டார்.  சாப்பிட்டதில்  பரம த்ருப்தி.பின் எங்கள். Flat க்குள் வந்தோம்.
(தொடரும்)

No comments:

Post a Comment