Thursday 17 March 2016

10. சிறு வயது முதல் வாழ்க்கையின் விளிம்பு வரை.பக்கம்10

               இரவு யோஜித்து, காலை முடிவுசொல்வதாய் VK தெரிவித்தார். இரவு முழுக்க, நான் மேல் ceiling ஐப்பார்த்து, கண் கொட்டாமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன். வந்ததை எண்ணி வருந்துவதா? . வருங்காலத்தை எண்ணி பயப்படுவதாக?  அல்லது, அந்த தெய்வத்தை நொந்தார் கொள்வதா? . இரவு தேய்ந்து, பகலவன் எட்டிப்பார்த்தான். மணி 5 . படுக்கையை விட்டு எழுந்ததும்,
முதல் வேலையாய், VK என்னிடம், " நான் முடிவு செய்து விட்டேன் "என்றார். அவரை கேள்விக்குறியுடன் நோக்கினேன். ஆம், Treatment க்குத்தயார் என்றார். நான் ஒரு நிம்மதிப்பெருமூச்சு விட்டேன். முதல்நாள் நான் பட்ட அவஸ்த்தை, என் வாயால் Treatment
வேண்டாமென, சொல்லி, வபரீதமாய் ஏதாகிலும் ஆனால் என்ன செய்வது? இல்லை, Treatment
செய்து கொள்ளுங்கள், என்று சொல்ல,  இந்த வயதில், Readiation தாங்காமல் கஷ்டப்பட்டால்,
பின் வாங்கவும் முடியாதே ? என கலங்கிய எனக்கு, கடவுள் அவர் வாய் மூலம், வழி விட்டது அப்பாடா என இருந்தது. அது உடனே நீர்குமிழி மாதிரி உடைந்ததும், என் பயம் என்னைக்கவ்விக்கொண்டது. எனக்கும் சின்ன வயதல்லவே? என் வயது 80 து. எப்படி சமாளிக்கப்போகிறோமென கதி கலங்கி நின்றேன்.
                         பின் phone மூலம் குழந்தைகளுடன் மாநாடு கூட்டப்பட்டது. பின் எப்பொழுதும்போல் , அவர்கள் எனக்கு, ஆரம்ப நிலை இது அடியோடு குணமாகிவிடும், என்றும்
ஒவ்வொரு குழந்தைகளாய் வந்து என்னுடன் இருப்பது என்றும், ஏற்பாடாயிற்று, பணத்தை வாரி இறைத்து செலவழித்தார்கள். பணத்தாலும் , வைத்தியத்தாலும், உடம்பு உபாதைகளை, யாரும் வாங்கிக்கொள்ளமுடியாதே? 84வயதிலும் சற்றும்  தளறாமல், தன் கஷ்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,  ஸதா பகவான் நாமாவைச்சொல்லி , தெம்பை வரவழைத்துக்கொண்டார். அம்மா இல்லாத அவரை வளர்த்த அவர் அப்பாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்..
 வந்தவர்களின், வயிற்றுப்பாட்டைப்பார்க்கவும், வீட்டு நிர்வாகத்தை ஒட்டவும், VKயின்
உடல்நிலையை, கவனிக்கவும், என் தேகத்தைச்சாராகப்பிழிந்தேன்.( இதை என் இரண்டாவது பிள்ளை பாலாஜி, அம்மா வேலைசெய்வதை பார்க்க கஷ்டமாய் இருக்கிறது. ) என்று
சொன்னதாய்கேள்வி.அப்பாவைப்பற்றிய, கவலையும், என்னைப்பற்றி, பரிதாப்ப்டுவதுமாய்
இருந்திருக்கிறார்கள், குழந்தைகள்.  பாசமுள்ளவர் குழந்தைகளைக்கொடுத்த பகவானுக்கு,
பல கோடி நமஸ்க்காரங்கள்.

    குழந்தைகள், ஒருவர் மாற்றி ஒருவர் ஒலிம்பிக்ரேஸ்மாதிரி, வந்து செய்தார்கள். மாதங்கள்,
உருண்டோடியது. VK மிக்க பலஹீனமாய் இருந்தார். அப்பொழுது, என் அக்காவின் மரணச்செய்தி வந்து, நான் அங்கு போகமுடியாமல் இருந்தது. அப்படி இருந்தும் என் பிள்ளை பாலாஜி, அம்மா, பெரியம்மாவின் சாவுக்கு, செல்லாமல் இருந்தால், பின்னாடி அம்மா, Reagret பண்ண, நேரும்,
என்றும், தான் என்னை அழைத்துப்போவதாய் சொன்னான். அதற்கு உஷா தான் 10day அன்று,
என்னை அழைத்துப்போகிறேன் என்று , சொல்லி, செயலிலும் காட்டினாள்.

        ஆக Treatment முடிந்தாலும், Weekness பாடாய்படுத்தியது. நடக்கவே சிரம்ப்பட்டார். பின் சில மாதங்களில் துடையில் வலி வந்து, இது எதனால், வலி என புரியாமல், பின் ஆர்த்தோ
டாக்டரிடம், காண்பித்தோம். அவர் check பண்ணி எல்லாம் சரியாய் உள்ளது, வயதாகிவிட்டதால்
முடியவில்லை என்றார்.  இது அவர் சொல்லி நமக்குத்தெரியவேண்டாம். !!பின் VK யையும்,
கவனித்து,  கொண்டு வீட்டையும் நிர்வாகம் செய்வது, ரொம்ப சிரம்மாய்த்தான் இருந்தது. கொஞ்சம் திணறித்தான்போனேன்.

            தெய்வம் வழி காட்டுவார் என்று சொல்வார்கள். ஆம், VK யின் you tube lecture  போது,
ஒரு camera women வருவது வழக்கம், அடிக்கடி வருவதால், எங்களிடம் நெருக்கமாய் பழகுவாள்.
அப்படி ஒரு நாள் வந்த பொழுது, இவரைப்பார்த்து, என்ன மாமா,உங்கள் வேகமான நடை எங்கே போயிற்று,  இப்படி நடக்கிறீர்களே என்றாள்.பின்,விஷயத்தைச்சொன்னதும், அவள் எனக்கு ஒரு டாக்டர் தெரியும், ஆனால் அவரிடம், Appointment கிடைப்பது கஷ்டம், என் பாட்டியின் Appointment ஐத்தருகிறேன், நீங்கள் இஷ்டப்பட்டால் காண்பியுங்கள் என்றாள். எத்தைத்தின்னால், பித்தம்,தெளியும், என்பது போல் நானும் இவரும் அங்கு சென்றோம்.
(தொடரும்)

Wednesday 16 March 2016

9. .சிறு வயது முதல், வாழ்க்கையின் விளிம்புவரை. பக்கம் 9

                     நாங்கள் இருவரும் வயது 70 தைத்தாண்டினோம் என் குழந்தைகள் ஒரு மனதாக,
தனிமையில் சென்னையில் இருக்கக்கூடாது எனவும், எங்களிடம் வந்து விடுங்கள், எனவும்
சொன்னார்கள். நாங்கள் எங்களுக்குத்தெம்பு இருக்குமட்டும், இருவரும் குடித்தனம் செய்கிறோம் என்றதால், அவர்கள் அப்படியானால் ஏதாவது, குழந்தைகள் பக்கத்தில்தான் இருக்க வேண்டுமென்றே அன்புக்கட்டளை, போட்டதால், நாங்களும் சென்னை வீட்டை விற்று, விட்டு
பெங்களூரில் Flat வாங்கிக்கொண்டு, என் கடைசி பெண் உஷா பக்கத்திலேயே, குடி வந்தோம்.
அடிக்கடி US செல்வதும், குழந்தைகளின், பொருளாதார வளர்ச்சியையும், குடும்ப, வளர்ச்சியையும்,
பார்த்து மகழ்வோம். வாழ்க்கைச்சக்கரம் மேடுபள்ளமில்லாமல் இருக்குமா? அது மகாபாரத்த்திலேயே இல்லையே!!

           என் கணவருக்கு 82 வயதில் By pass sergery பண்ண வேண்டுமென, நிலை ஏற்பட, என்
குழந்தைகள், ஒருவர் மாற்றி ஒருவர் வந்து உதவி பணத்தையும் வாரியிரைத்து, வைத்யம் செய்ய, என் 78 வது வயதில் இவைகளை சமாளிக்க, திணறித்தான் போனேன்.  யாருக்கு இந்த மாதிரி குழந்தைகள் கிடைக்குமென,மனது, எண்ணி, தெம்பையும் கொடுத்தது. 15 வயதில் மாட்டிக்கொண்ட பந்தம், த72 வயதிலுள்ள விடவில்லை , என எதிர் நீச்சல் போட்டேன். அதிலிருந்து மீண்டு வந்து , சிலபேரன், பேத்தி, கல்யாணங்களைக் கண்டு களித்தோம். எங்கள், 8 பேரன் , பேத்திகளும்,5 கொள்ளுப்பேரன், பேத்திகளும், மட்டில்லா மகிழ்ச்சியில், திணற அடித்தார்கள்.
நிழலின் அருமை, வெயிலில், போனால்தான் தெரியும் என்பதுபோல்,  என் கணவருக்கு, எப்போதும் போல் Master checkup  செய்ய, அதில் எல்லா Reselt ம், exalend, Exalend
என்று , வர  Psa மட்டும் எண்ணிக்கையில் அதிகம் காட்ட,  biopsy எடுத்தோம்
   biopsy எடுக்கச்சுன்னார்கள், என்று சொன்னேனல்லவா, எடுத்ததில், prostaet cancer
ஆரம்ப நிலையில் இருப்பது தெரிந்தது. நிலை குலைந்துபோனோம். Prostaet cancer Docter
எங்கள் complex லேயே, வசித்து வந்ததால் சீக்கிரத்தில் opaintment கிடைத்தது.
என் பேத்தியும், அவள் கணவரும் டாக்டர்கள். உலகத்தில் 80 பது பேர்களுக்கு, இருக்கிறது,அவரகளுக்குத்தெரிவதில்லை, என்றும், இந்த வயதில் வைத்தியம் வேண்டாம்
என்றும், சொன்னார்கள்.
              இங்குள்ள  டாக்டர், treatment செய்து கொள்வதும் வேண்டாம் என்பதும் உங்கள் இஷ்டம்.
செய்து கொண்டால் இதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை, உங்கள் உடம்பு தாங்குமா?
பணச்செலவு முடியுமா? உதவிக்கு மனிதர்கள் இருக்கிறார்களா? எல்லாவற்றையும், யோஜனைசெய்து பின் வாருங்கள் என்றார்.உடனே நான் அவரை ஒரு கேள்வி கேட்டேன்.
உங்கள் அப்பாவோ அல்லது, மாமனாரோவாக, வோ இருந்தால் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?
என்று கேட்டேன். அதற்கு அவர், VKயின், உடல் நிலை ஆரோக்யமாய் உள்ளது என்றும்,
அவருக்கு vill power ம் இருக்கிறது என்றும், இந்த treatment ஐ தாங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, என்றும், இதை மேற்கொண்டால்தான் நல்லது என்பதால்  இந்த மாதிரி உடல்நிலை இருந்தால் கட்டாயம் என் உறவினராய் இருந்தால் Treatment பண்ணுவேன் என்றார். பின் வீட்டிற்கு வந்தோம்.
                இரவில் குழந்தைகள் நால்வரிடமும் பேசினோம். நால்வரும் ஏகமனதாய், பணத்தைப்பற்றியோ, மனித உதவியைப்பற்றியோ, துளிக்கூட யோஜிக்க வேண்டாம், நாங்கள் நால்வரும் தலையைக்கொடுப்போம், வைத்யமுறையில், உங்களுக்கு இருக்கும், அசௌகர்யம் பற்றி மட்டும், நீங்கள் உங்கள் விருப்பத்தைச்சொன்னால் போதும் என்றார்கள்.  கடவுளே, அடுத்த, ஜன்மம்
என்று இருப்பின், இந்தக்குழந்தைகளையே கொடு, என கண்ணீர் மல்கினேன்.அப்பாவின்
விருப்பத்திற்கு விட்டு விடுங்கள். என்றும், அதில் என் மூத்த பிள்ளை, அப்பாவின் முடிவ
சரியோ, தப்போ , எதுவானாலும், யாரும் அவரைக்குற்றம் சொல்லக்கூடாது. என்றான்.
த்த்துவமான , வார்த்தையை எவ்வளவு அழகாய் சொல்லியுள்ளான் என்  பிள்ளை!!!
( தொடரும்)

Sunday 13 March 2016

8. சிறு வயது முதல், வாழ்க்கையின் விளிம்பு வரை. பக்கம் 8

           ஆக பாஷைதெரியாத, ஊரில்,குளிர்தேசத்தில் , பெரிய பங்களாவில், குடித்தனத்தை,
ஆரம்பித்தோம்.கட்டில் முதல் கம்பளி வரை, வாங்கவேண்டியிருந்தது. வாங்க கடைக்குச்சென்றால் பாஷை? தெரியாது? சத்தத்தாலும், சைகையாலும் ஏதோ பேசி, நண்பர்களின் உதவியை
வைத்துக்கொண்டு, சமாளித்தோம். Vkக்கு சுத்த ஹிந்தி தெரியும். நடைமுறை ஹிந்தியும் மார்வாடியும்,  தெரியவேண்டுமே?

      திரும்பவும்  டியூஷன் மாஸ்டர் தேடும் படலம். குழந்தைகளுக்கு, கடவுள் புண்ணியத்தில்,
டியூஷன் ,மாஸ்டரும் கிடைத்து, குழந்தைகளை ஸ்கூலிலும் சேர்த்தாயிற்று. குடும்பம், தடையில்லாமல் ஓடினாலும், என் கஷ்டம் என்னை விடவில்லை. பாஷைதெரியாமல், வேலைக்காரியிடம் வேலை வாங்குவது, விலை வாசி உயர்வைப்போல் பயங்கரமாய் இருந்தது..  சில மாதங்களில்
நானும் ஹிந்தி பேசக்கற்றுக்கொண்டு, நிறைய friendsம் பண்ணிக்கொண்டு, lady's club ல்
ஜாங்கிரி, demonstration , செய்யும் அளவுக்கு வந்தேன். 9 வருடம் தமிழ் அஸோஸியேஷனுக்கு,
President ஆக, இருந்து, 300 பேர்களுக்கு, தீபாவளி, பொங்கல் என, சமையல் செய்து, function ஐ
நடத்தினேன்.

         23 வருடம் பிலானியில் இருந்து, நாலு குழந்தைகளும், graguvat ஆகி,மேல்நாடுகளுக்கும் சென்றார்கள் . இவரும் retired ஆனார்.1983ல் flat வாங்கி, பின் 1988 ல் குடிவந்தோம்.
அங்கு, இருதரப்பினரின் உறவுகளுடன், அவர்களைச்
  சென்று பார்ப்பதும், அவர்களை அழைத்து , விருந்தோம்பல்
செய்வதும், என 16 வருடங்கள் உருண்டோடின. இரண்டு பையன்களுக்கும் கல்யாணமாகி, பின்,
நிறைவு, பிரிவு, என, சில வருடங்கள் ஓடின.

தொடரும்



Tuesday 8 March 2016

7. சிறு வயது முதல் வாழ்க்கையின் விளிம்புவரை பக்கம் 7

   சென்ற blogல் என் பையன்கள் paper boy க இருந்த தைப்பற்றிச்சொன்னேன், இரண்டு வருட முடிவில். அவர்களைப்பற்றி News paper ல் போடுவதற்காக, interview பண்ண, வந்தார்கள். அவர்கள் paperboyயாகஇருந்து சேர்த்த பணத்தை
என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டார்கள்.  பாலாஜி,
தன் மேல்படிப்புக்காக உபயோகிப்போம் என்றான், ரவி ஊரிலிருக்கும், தன் அக்காவின் கல்யாணத்துக்கு உதவுவோம் என்றான். அது பேப்பரில் வந்து பிரபலமாய் பேசப்பட்டது. இப்படி நாட்கள் ஓடின, இந்தியாவில் விட்டு வந்த பெண்ணை நினைத்து வருந்துவதும், திரும்ப இந்தியா சென்றால் எங்கு வேலைக்குச்செல்வது என்ற, கவலையும், எங்களைத்தொத்தத்தொடங்கியது. இதற்கிடையில் எங்களுக்கு visa problem  வந்து, அதை,
Mr. Mrs Cade மூலம் ஒரு Senate Member ஆல் அதை தீர்த்துவைக்கப்பட்டது                 ( Mr and Mrs Cade பிற்காலத்தில் அவர்கள் எங்கள் குடும்பத்தில்ஒருவறானார்கள். ))

         மூன்றாவது ஆண்டு முடிவில் VK  க்கு, இந்தியாவிலிருந்து, மூன்று offers வந்தது. ஒன்று கரக்பூர் I I T யிலிருந்து., மற்றொன்று, பிலானியலிருந்து. அப்புழுது பிலானி, சாதாரணகாலேஜாக,இருந்தது. MR . GD Birla  and MIT யும் சேர்ந்து,  அதை MIT மாதிரி ஆக்கத்தீர்மானித்து, சில  expreince of American univercity prof. களை வைத்து, அந்தக்காலேஜை மாற்றி அமைக்க தீர்மானித்தார்கள். அதில் முதலாவதாக அழைக்கப்பட்ட ஆசிரியர் VK. இதற்காக அவர் MITஇல் இண்டர்வியூ செய்யப்பட்டார்.  ஆக, குடும்பத்துடன் Ford Foundation செலவில் இந்தியாவிலுள்ள,பிலானிக்கு வந்தோம். முதல் நாள் NewYork.மறு நாள் பாலைவன பிலானி!! என் அண்ணா டில்லியில் இருந்ததால்,  டில்லியிலேயே, எல்லாசாமானும் , வாங்கிக்கொண்டு, பிலானி வந்தோம். அப்பொழுது உள்ள பிலானி இப்பொழுது உள்ளது போல் அல்ல. ஒட்டகத்தைத்தவிர ஒன்றும் கிடையாது.

         திரும்ப, குழந்தைகளை எங்கு சேர்ப்பது? ஹிந்தியும்,  தெரியாது என குழப்பம். .எங்களுக்குத்தான் குழம்புவதும், தெளிவும் கை வந்த கலையாயிற்றே!!! பிர்லாவினால்,ஏற்படுத்தப்பட்ட, மிக, உயர்ந்த, இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல். School fees ம் உயர்ந்தது தான்!!
ஆனால் horse riding, swimming, என பல  வித கலைகளும் உண்டு.
பெரி ய பெண் பத்மாவை  நாங்கள் இங்கு வருமுன்னேயே இங்கு சேர்க்க ஏற்பாடு செய்திருந்தார் VK. கடிதம் மூலம் காரியத்தை முடிப்பதில் மன்னன். சென்னையில் உள்ள பெண்ணை, பிலானி காலேஜில் சேர்த்து, அந்த காலேஜ் பிரின்ஸ்பாலை, gardian ஆக, இருக்கச்சொல்லி, என் அக்காமாப்பிள்ளையை விட்டு, பிலானியில் கொண்டுவிடச்சொல்லி, அவளை மூன்று மாதம் ஹாஸ்டலில் இருக்கச்செய்தார்.இதை எழு தற எனக்கு மூச்சுமுட்டுகிறதே இவ்வளவையும் எழுத்தில் வடித்து எண்ணத்தை சாதித்த என் கணவருக்கு எத்தனை சபாஷ் போட்டாலும் தகும் !!
  இதில் எது வேண்டுமானாலும் தப்பாய் முடியலாம் . இதை இவர் சாமர்த்தியம் என்று சொல்வதா?  இல்லை, எங்கள் மூதாதையர் கள் ஆசீ என்று சொல்வதா ? இல்லை எல்லாம் வல்ல, அந்த ஈசன் செயல் என்று சொல்வதா? அந்த ஈசனுக்குத்தான் தெரியும்!!!!


  (தொடரும்)        


6. சிறுவயதுமுதல் வாழ்க்கையின் விளிம்புவரை - பக்கம் 6

அன்று TMS வீட்டில் சாப்பிட்டுவிட்டு, எங்கள் flat க்கு வந்தோம். அவர் வீட்டில் தமிழ் சாப்பாடு சாப்பிட்டதில் குழந்தைகளுக்கு ப்ரம் த்ருப்தி. குழந்தைகள் ,அப்பாவைப்பார்த்த சந்தோஷத்திலும்
வந்த களைப்பிலும் நன்றாய் தூங்கினார்கள். நானும் VK யும் விடிய, விடிய பேசிக்கொண்டிருந்தோம். ( பிரிந்தவர், கூடினால் பேசவும் வேண்டுமா) என்பது போல் நான் தனிமையில் பட்ட கஷ்டங்கள், தனியாய் பம்பாய்க்கு குழந்தைகளுடன் ரயிலிலும், பின் US க்கு
Plane னிலும் வரும் போது எனக்கு ஏற்பட்ட பயமும், அதில் ஏற்பட்ட அனுபவங்களும், எல்லாம் நான் சொல்ல, பின் VK , தான்  US ல் காலடி எடுத்து வைத்ததும் ஏற்பட்ட கலாசாரங்களின் அதிற்சியும்,பணத்துக்குப்பட்ட பாடும் , வீடு தேடும் படலம் , சமைத்துச்சாப்பிடும் கஷ்டம். இவைகளையெல்லாம்
என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

           காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு , கதவைத்திறந்தேன். ஆறு அடி உயரத்தில்அரைக்கால்சட்டை அணிந்த ஒருவரும், அவருடன் கூட, அவர் மனைவியும், கையில் பெரிய,அட்டைப்பெட்டியுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.அவர்களை எப்படி அழைப்பது என அறியாமல்,
பாதி வார்த்தயிலும், மீதி செய்கையில்மாய் அவர்களை வறவேற்தேன். உடனே VK எழுந்து வந்து,Hello, Mr & Mrs  Day என்று அவரை  வரவேற்றார். பின் தான் கொண்டு வந்திருந்த crockery s,pans, pots,Coffee perculeter, , plates,cups & saucers etc. அடங்கிய பெட்டியைஎங்களிடம்கொடுத்தார்கள். பின்  எங்களிடம் விடைபெற்றுகிளம்ம்பினார்கள்.
                     
                    VK  மறு நாள் எங்கள் எல்லோரையும் TMS காரில் shopping அழைத்துப்போனார்.குடும்பத்துக்கு வேண்டிய சாமான்களும், குழந்தைகளுக்கு வேண்டிய துணிமணிகளும் வாங்கினார்.ஆனால் இந்தியாவிலிருந்து வந்த நான் டாலரிலிருந்து, ரூபாயாக்கி, விலை என்ன என்று பார்ப்பேன். எனக்கு தூக்கிவாரப்போடும், ஐய்ய்யோ இவ்வளவு விலையாகுமா, என எடுப்பதும் வேண்டாம் என வைப்பதும அதுஇல்லாமல் குடுத்தனம் செய்ய இயலாது, என வாங்குவதுமாய்   இருந்தது.

                அடுத்த கட்டம் குழந்தைகளை ஸ்கூலில் சேர்ப்பது, குழந்தைகள் கெட்டிக்காரக்குழந்தைகளாக இருந்ததால் ஸ்கூலில் சேர்ப்பது எளிதாய் இருந்தது.ஆனால் அவர்களைக்கொண்டுவிட, கார் வேண்டுமே? VKயின் நண்பர் மூலம், ஒரு secondeCar  வாங்கினோம். அதற்கு லைஸன்ஸ் வாங்க முதல்தரம் சென்று கிடைக்கவில்லை.இரண்டாவதுதடவை சென்றார் அப்பொழுதும் அவர் பாஸ் ஆகவில்லை. மூணாவது தடவையும்
Failஆனல் பின் மூன்றுமாதத்துக்கு  லைஸன்ஸ் வாங்க  முடியாது. என்ன செய்வது என கலக்கம்பின் ஆண்டவனை நம்பி அடுத்த. Test க்குச்சென்றார். கடவுள் ்கை விடவில்லை!!!அன்று VK லைஸன்ஸ் டன் வீட்டுக்கு வந்ததும் எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி,சொல்லிலடங்கா
இனி குழந்தைகளை ஸ்கூலில் கொண்டுவிட, shopping சென்றுவர,இன்னொருவர் உதவியை நாடவேண்டாம் என்ற நிம்மதி.நாம்கஷ்டப்படும்போதுதான்  அதன் அருமை தெரியும்.


                        அடுத்த கட்டம் குழந்தைகளுக்கு ஒரு tuition masterதேடவேண்டும்,திரும்பவுமVKயின் நண்பர் மூலம்  ஏற்பாடாயிற்று. Mrs. Cade  என்பவள்.நாளை 5 மணிக்கு , குழந்தைகளுக்கு, பாடம் சொல்லிக்கொடுக்க, ஏற்பாடு செய்து விட்டு, காலேஜ் சென்றார் . மாலை ஐந்து மணி இருக்கும், ஆறு அடி உயரமும், அரை அடிக்கொண்டையும், அரை அடி high heels மாக, ஒரு பெண்மணி  ஒய்யாரமாய் நடந்து வந்தாள்.
வந்ததும், மூன்று குழந்தைகளுக்கும் மூன்று dicshenery வாங்குங்கள் என்றும், மறு நாள் ஐந்துமணிக்கு வருவதாகும், சொல்லிச்சென்றாள்.

                  இரண்டு நாள் கழித்து, காலேஜிலிருந்து இவர் phone பண்ணினார், நம் வீட்டு வழியாய் ஒரு பஸ் வரம் என்றும், , அதில் 
25 cent கொடுத்து ஏறினால், காலேஜில் இறங்கிக்கொள்ளலாம் என சொன்னார்.மனதில் தயக்கம் இருந்தாலும், தைர்யத்தை
வரவழைத்துக்கொண்டு,  குழந்தைகளை சம்த்தாய் வீட்டில் இருக்கச்சொல்லிவிட்டு, நான் பஸ் ஏறினேன். இவர் எனக்கு 25 நிமிடத்தில் வந்து சேருவாய் என்று சொல்லியிருந்தார். ஆனால் 45 நிமிடம் ஆகியும், காலேஜ்  வரவில்லை, ஆனால் பஸ் பல இடங்களில் நின்று, என் வீட்டுப்பக்கமே வந்து,நின்றது. நான் driver டம் சென்று, நான் university செல்லவேண்டும், அது இன்னும் 
வரவேயில்லையே.? என்றேன். ( இவ்வளவும் திக்கித்திணறி ஆங்கிலத்தில் கேட்பதற்குள், என் உயிரே பொய்விட்டது)
அங்கு பஸ்ஸில் கண்டெக்டர் கிடையாது. எல்லாவற்றுக்கும் driverதான்.  அதற்கு அவர் காலேஜ் போய்விட்டது என்றாரே
பார்க்கணும்.எனக்கு தூக்கிவாரிப்போட்டது. பின் நான் என்ன செய்ய, என்று பதறிப்போய்கேட்டேன். கவலைப்படாதே இந்த பஸ் சுற்றிக்கொண்டேயிருக்கும், காலேஜ்வரும்பொழுது சொல்கிறேன் இறங்கிக்கொள் என்றார். அப்பாடா என்று காலேஜ் வந்ததும்
இறங்கனேன். 

                     அது ஒரு காலேஜா, ஒரு ஊர் மாதிரி  பல மாடிக்கட்டிடங்களுடன் காட்சி அளித்தது. இவ்வளவு பெரிய இடத்தில்,
இவர்  departmentஐ கண்டுபிடித்து, அதில் இவர் roomஐ கண்டுபிடிப்பது என்பது, நடக்குமா என் எண்ணி இவரை மனதால் திட்டிக்கொண்டிருக்கும் சமயம், Hi,are you
Mrs. Krishnamurthy. ? என்றார் ஒரு 6 அடி உயரமும், அரைக்கால்சட்டையுமாக, ஆமாம் என்பதற்கு அடையாளமாய் தலையை ஆட்டினேன். பயத்தில் yes சொல்ல வாய் வரவில்லை. You want to go to your husbands room ? என்றார் yes yes என்றேன். 

அனுமன் வந்து சீதையை காப்பாத்தியமாதிரி இருந்தது. அவர் என் கையை பிடித்துக்குலுக்கி you are welcome என்றார்.
அப்பொழுது என் தேகம் பூமி வெடித்து  உள்ளே போவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. என் அப்பா அண்ணாக்கள் தவிர
என்னைத்தொட்டவர்கள் கிடையாது.அப்படி இருக்க அதிர்ந்துநின்றேன. பின் வேறு வழியில்லாமல் அவரை பின் தொடர
அவர் Dr Krishnamurthy என்று பலகை மாட்டிய அறையில் கொண்டுவிட்டார்.நான் எனக்கு ஏற்பட்ட அதிற்சியை VK யிடம்,
சொல்ல, அதற்கு இவர், இதெல்லாம் ஒருgood, experience என்றும், இங்கு கை குலுக்குவது சர்வ சாதாரணம்,இதற்கெல்லாம்
நீ அதிரக்கூடாது, நீ ஒரு அமெரிக்க யுனிவர்ஸிட்டியில் ஒரு professor ன் மனைவி என்று என்னை சமாதானப்படுத்தனார்.
இதெல்லாம் 1963ல் நடந்தது, இப்பொழுது இங்கேயே சர்வசாதாரணம். 






   குழந்தைகள் வெகு சீக்கிரம் இங்கிலீஷ் பேசவும் , படிக்கவும் கற்றுக்கொண்டு, நிறைய friendsம்பண்ணிக்கொண்டார்கள். நாங்கள் இருந்த குடியிருப்பு, post graugevat students குடியிருப்பு.ஆகையால் யாவரும் காலேஜ் students. பல தேசத்து மனிதர்கள் இருந்தார்கள். ஆதலால் என்
English ஒன்றும் மோசமாய் இல்லை. இருப்பினும் கடைகளில் சாமான்வாங்க திணறித்தான் போனேன். வீட்டில் வந்து, gramerஐப்பார்த்து, படித்துப்பழகி,வீட்டு வேலையும் படிப்புமாக இருந்தேன். ஆனால் தப்போ தவறோ, பேசி , சமாளித்து வெளிவரும் சாமர்த்தியம்எனக்கு இருந்தது.

                ஆக நாட்கள் ஓடின, எனக்கும் பல தேசத்துfriendsம் American friends, கிடைத்தார்கள்.
இதற்கிடையில் என் பையன்கள் paper boy ஆனார்கள் .paper boy என்பது தினமும், பேப்பர்
போடுவதுதான் ,ஆனால் அதை பள்ளிபையன்கள்தான் போடுவது வழக்கம். அதில் வந்து saccess
ஆனால் தனி பெருமையும்,அதில் நிறைய, custermers ஐச்சேர்த்தவர்களுக்கு, பரசுகள்,
வழங்கப்படும். அதில் என் முதல் பையன் ரவியும், இரண்டாவது பையன் பாலாஜியும் ஆளுக்கொரு
சைக்கிள் பெற்றார்கள். பின் ரவி, ஒருcontestல் Newyork world fair க்குஅழைத்துச்செல்லப்பட்டான்
அடுத்த மாதம் பாலாஜி Rose bowl என்னும் baseball என்னும் விளையாட்டு அரங்கத்திற்கு
அழைத்துச்செல்லப்பட்டான். இவைகளெல்லாம் இவர்களுக்கு, ஒரு  rech experience ஆக இருந்தது.








Saturday 5 March 2016

5. சிறுவயதுமுதல் வாழ்க்கையின் விளிம்புவரை - பக்கம் 5

கெய்ரோ என்னும் தேசத்தில் எங்கள் எல்லோரையும் இறங்க வேண்டும் என்றும், clean செய்த பின்
உள்ளே அனுமதிப்பேன் என்று சொன்னார்கள். அப்பொழுது பாலாஜி தூங்கிக்கொண்டிருந்தான்.
Air hostess அவன் தூங்கிக்கொண்டிருக்கட்டும்  நான் பார்த்துக்கொள்கிறேன் என்றதால், ரவியையும், உஷாவையும் அழைத்துக்கொண்டு, இறங்கினேன். Mr. மஜும்தார்  எங்களுடன் வந்தார்.அவர் எங்களுடன் வந்தார் என்பதை விட நாங்கள்தான் அவருடன் சென்றோம் என்பதுதான் உண்மை.

         பின் அவர் ஒரு கடையில் சிகரெட் வாங்கி, பிரித்து, உபயோகித்தார். பின் அவர் கடைக்காரனிடம், Travelers check கொடுக்க, அதை அவன் வாங்க மறுக்க, அவன் தனக்கு டாலர்தான் வேண்டுமென தன் பாஷையில்கத்த, அவர்,பிரித்த சிகரெட்டையும் ,திருப்பிக்கொடுக்க
முடியாமல், தன்னிடம் டாலர் இல்லை என்பதை அவன் பாஷையில் சொல்லவும் முடியாமல் தவிக்க, நான் என்னிடமுள்ள, டாலரை அவருக்குக்கொடுத்து உதவினேன். ஆக அவனிடமிருந்து தப்பினோம்,  என்றும், தக்க சமயத்தில் நான் உதவியதில் உள்ள த்ருப்தியும் அவர் முகத்தில் தெரிய, எனக்கு பல பல நன்றி சொல்லி பாராட்டினார். ஆக அவர் உதவி எனக்குத்தேவைப்படும் என எண்ணிய எனக்கு என்னால் அவருக்கு உதவ முடிந்ததை , நினைத்து, சந்தோஷப்பட்டேன்.

                    பின் யாவரும் Newyork வந்தடைந்தோம். அங்கு customs clear பண்ணி, Plane மாறி சிகாகோ செல்ல வேண்டும்.அங்குதான் VK என்னை அழைத்துப்போக வருவார். ஆகையால் முன் கூட்டியே VK  தன் student மனோகர் என்பவருக்கு, என் photoe வையும், எனக்கு அவர் photoe வையும், அனுப்பி , எங்களை, ,NewYork ல் சந்திக்க வைத்தார். அவர் உதவியால் நாங்கள் Plane மாறினோம். இவ்வளவும் எழுத்தில் வடிக்கவே மூச்சுமுட்டும் எனக்கு, நடைமுறையில் எப்படி இருந்திருக்கும்!!!  ஈசன் கொடுத்த தைர்யமும், இளமை பருவ தெம்பும், என்னை, நடத்திச்சென்றது.

                         NewYork ல் Plane ஏறியதும், அப்பாடா, என்றிருந்தது. இந்தத்தடவை இறங்கும்போது VK  யை பார்த்து விடுவோம் என பெருமூச்சுவிட்டேன். கடைசியில் சிகாகோவை வந்தடைந்து, VK யையும் சந்தித்தேன்.அப்பொழுது எனக்கு ஏற்பட்டது, ஆனந்தமா அல்லது,
பொறுப்பையெல்லாம் இவரின் காலடியில் சேர்த்துவிட்ட ஆயாஸமா? அறியேன். மனமும் , உடலும் கழண்டுவிட்டது.. குழந்தைகளுக்கு  அப்பாவைப்பார்த்த. சந்தோஷம். .  அன்று, Urbana என்ற ஊருக்கு TMS என்ற சினேகிதர்  அவர் காரில் எங்களை அழைத்துச்சென்றார். பின் அவர் வீடு சென்றோம்.அவர் மனைவி தமிழ்ச்சாப்பாடு போட்டார்.  சாப்பிட்டதில்  பரம த்ருப்தி.பின் எங்கள். Flat க்குள் வந்தோம்.
(தொடரும்)

Monday 8 February 2016

ஆறாவது அண்ணாவின் அரிய செயல்கள்

என் ஆறாவது அண்ணாவின் பெயர் ஜயராமன். நாங்கள் அவரை ஜயம் என்றே கூப்பிடுவது வழக்கம். சிறு வயது முதலே பெயருக்கு ஏற்ற மாதிரி ஜயராமனாய்  திகழ்ந்தவர். என் அம்மாவுக்கு,அவர் சிறுவனாய் இருந்த பொழுதுமுதல்,அவர் மேல் அபார நம்பிக்கை.கொடுத்த காரியத்தை
பொறுப்பாகவுும், திறம்படவும்  செய்துமுடிப்பார். தைர்யசாலியும்கூட. அதனால்என் அம்மா, அவருக்கு 15 வயதாயிருக்கும்பொழுதே, 25வயது பிள்ளையிடம் யோஜனை கேட்பதுபோல் கேட்பார். அவ்வளவு புத்திசாலி அவர். வீட்டை காலிசெய்யவேண்டுமா?  ஜயா அண்ணாஉதவியுடன்தான்.
உயர்ந்த பொருள் வாங்க வேண்டுமா ஜயாதான். லாரியில் சாமானுடன் செல்லவேண்டுமா ஜயாதான். ஆக ஜயராமனாய் விளங்கியவர் அவர்.பட்டப்படிப்புபெற்று பதவி உயர்வு அடைவது பெரியதல்ல,
SSLC படித்து, படிப்படியாய்  பல வித பரீட்சை எழுதி, பதவி உயர்வு பெற்று, chief accounts officer பதவி பெற்றார். பதவியில் இருக்கும்பொழுது, ரயில்வேயில் ஏகப்பட்ட சலுகைகள் உண்டு. வேலையில் நேர்மையும் கண்டிப்பும் மிக்கவர். மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவர், தன்னிடம் தப்பு இருந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனமுள்ளவர்.தம்பி தங்கையுடன் மிக்க பாசமுள்ளவர்.

              ஒரே பிள்ளைக்கு  நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்து, ஓய்வு பெற்றதும் பிள்ளையிடம், சேர்ந்து, ஒற்றுமையாய் இருப்பவர் .ஒருவர்கையையும் எதிர்பாராமல் தான் மற்றவர்க்குசெய்யும், நிலையில் இருப்பவர். மனதுக்கு விரோதமாய் ஒரு போதும் நடக்கமாட்டார்.
94 வயதிலும் துள்ளி எழுந்து நடமாடுபவர். அவரின் திறமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தான் என் ஜயா அண்ணா.

Sunday 7 February 2016

மேதை என் கிட்டு அண்ணா

               நாங்கள் என் தாய் தந்தையருக்கு 9 பது பேர்கள். என் ஐந்தாவது அண்ணா பெயர் கிட்டு.
படு சுட்டியது இருப்பார்கள். என் நாலாவது அண்ணாவுக்காக என் அப்பா ஒருவரிடம் தன் பிள்ளைக்கு வேலை வாங்கித்தர வேண்டுமென க்கேட்டு, அவரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு
வந்தார்.என் நாலாவது அண்ணாவோட interview பண்ண.என் நாலாவது அண்ணாவோ அந்த வேலைக்குப்போகமுடியாது என்று சொல்ல,என் அப்பா என் அம்மாவிடத்தில் கத்த,அம்மா என்ன செய்வதறியாமல் கதிகலங்கிய நின்ற சமயத்தில் இந்த ஐந்தாவது  அண்ணா ( S S L C  , யில் Selection ஆகாமல் இருந்த இந்த கதாநாயகர்). நான் அந்த வேலைக்குப்போகிறேன் என்றாராம்!!!
வளர்த்தியிலும் peuniy யாய் இருப்பாராம்.எப்படி இவனை அனுப்புவது என என் அம்மா தயங்க,
என அப்பா வந்தவர் interview பண்ணட்டும் பின் பார்க்கலாம் என்றாராம். அந்த interview ல்
கிட்டு அண்ணா டாண் டாண் என அளித்த பதிலில்  வந்தவர் மிக்க மகிழ்ச்சி அடைந்து என் கிட்டு அண்ணாவின் முதுகில் தட்டிக்கொடுத்து ,வேலைக்குச்சேர்த்துக்கொண்டாராம். இதை என் அம்மா அடிக்கடிஎங்களிடம் சொல்லிப்பெருமை படுவாள்.

               கிட்டு அண்ணாவுக்கு தன் தம்பி ,தங்கைகள் மேல் பாசமும், பரிவும் அதிகம். தனக்கு என
ஒன்றும் வைத்துக்கொள்ளமாட்டார். அந்த சின்ன வயதில் தான் வாங்கும் சொற்ப சம்பளத்தில்
எங்களுக்குத்துணி மணி , அம்மாவுக்குப்புடவை என வாங்கி வருவார். நாங்கள் ஆவலுடன் அவர் வரவை எதிர்பார்ப்பதுண்டு.சில சமயம் side business செய்து, அதில் வரும் சொற்பதொகைலயில்
என் அக்காவையும், அவள் குழந்தைகளையும்,அழைத்து வந்து எங்களுடன் இர்ப்பார்.side busyness
என்பது, கடையில் ஜமக்காளம் வாங்கி விற்பதில்லை வரும் comition தான்!!!
இப்பொழுது நினைத்துக்கொள்கிறேன் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமெனஇதைஎழுதும்போது என் கண்களை கண்ணீர் மறைகிறது.

        Whttp://www.houzz.com/photos/39140304/Baxton-Studio-Prescott-Modern-Table-and-Stool-Set-with-Hidden-Storage-transitiosetshttp://www.houzz.com/photos/39140304/Baxton-Studio-Prescott-Modern-Table-and-Stool-Set-with-Hidden-Storage-transitional-coffee-tsetshttp://www.houzz.com/photos/39140304/Baxton-Studio-Prescott-Modern-Table-and-Stool-Set-with-Hidden-Storage-transitional-coffee-table-sets


                 இப்படி கொஞ்சமாய் முன்னுக்கு வந்து, பின், குண்டூர் (ஆந்திரா) சென்று புகையிலை
வியாபாரம் செய்தார்.அதில் நல்ல லாபம் கண்டு, செல்வச்செழிப்பாய் இருந்தார்.ஆஹா எவ்வளவு செல்வாக்கு அவருக்கு ! !எல்லோரும் அவரை( கிருஷ்ண மூர்த்தி காரு) என வரை ஒரு தெலுங்கனாகவே மதிப்பார்கள். அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்து அதில் ஒன்று இறந்து,
வியாபாரத்திலும், நஷ்டம், ஏற்பட்டு, கங்காபூருக்கு வேலைக்குச்சென்றார், அப்பொழுது,
தன் தங்கையுடம், ஒரு பிள்ளையை படிப்புக்காக விட்டுச்சென்றார். என்னதான் தன் தங்கையுடன் விட்டாலும்,பிள்ளையின் பிரிவு எப்படி இருந்திருக்கும் என இப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன
(அதுவும் தாய்க்க) ஏனோக்கு அங்கிருந்து டில்லிக்கு வந்தார்.கழந்தை குட்டிகளுடன்,ஊர் விட்டு
ஊர் வருவது என்பது சுலபமல்ல. நான் எழுத்தில் வெடிப்பதிர்வு சுலபம். நடை முறையில்?
இவ்வளவுக்கு ஈடுபட்ட கொடுத்து, அவர் என்ன Graduate மல்ல. தானே ஒரு வேலையைத்தே(Royal en reeled) தன் விடா முயற்சியால், முன்னுக்கு வந்து  கோலோச்சினார். அப்படியே இருக்க கடவுள்.
விடவில்லை, ஆரம்பத்திலேயே காலுக்கு இரு குழந்தைகளைப்பரிகொடுத்தவர், பின்
வளர்ந்த பிள்ளையை உலகுக்குக்கொடுக்க நேர்ந்தது. ஆம் அந்தப்பிள்ளை தான் சன்யாசியாகி,
உலகுக்கு, நன்மை செய்யப்போவதாய், எழுதி வைத்துவிட்டு, போய்விட்டான். அவன் ஒரு MBBS
பட்டதாரி!!!  கடலில் எறிந்தாலும் என்னால் எழுந்திருக்க முடியும் என நிரூபித்தவர் என் அண்ணா .
வேலையில் உயர்த்தவும் எட்டி, கார்  டிரைவர், ஆள் படை என ராஜா மாதிரி இருந்தார்.
தன் தகப்பனாரையும் தன்னிடம் கொண்டு வைத்துக்கொண்டு, தேவைப்பட்டவர்களுக்கு,
தன் முயற்சியில் வேலை வாங்கிக்கொடுத்து, பல , பல, குடும்பங்களுக்கு, வீட்டில் அடுப்புகள், விளக்கும் எரியச்செய்தவர என அண்ணா . பின் தன் குழந்தைகள் ப்படிக்க வைத்து, வேலையில் அமர்த்தி, அவரவர் தன்னிடங்களுக்குச்சென்றபின், தன் ஓய்வுகாலத்தை, ஒரு அருமையான, flare ல்
நிம்மதியாக இருந்தார்.
                  அதே ஊரில்  உற்றார் உறவினர், இருக்க, அவர்களை, அடிக்கடி, சந்திப்பதிலும், விருந்தோம்பல், செய்வதிலும், தன் கடசிகாலத்த, நிம்மதியாக்க்கழித்து, தான் வந்த, வேலை முடிந்த, திருப்தியில் 89வது வயதில், நிறந்தர, ஓய்வுபெற்றார. இதுதான் , என் மேதை, கிட்டு அண்ணா.


       


            

Monday 1 February 2016

4. சிறு வயதுமுதல் வாழ்கையின் விளிம்புவரை. பக்கம் 4

பலகஷ்டங்கள் இடைஞ்சல்கள்  சுகங்கள் என மாறி, மாறி வந்தன.மனம்  ஒடிந்து போவதும் பின் தலை நிமிர்ந்து நிற்பதுமாக பத்து மாத காலம் ஓடியது. இவரிடமிருந்து பத்துபக்கக்கடிதம் ஒன்றுவந்தது. அதில் எங்களை US அழைத்துப்போவது பற்றி இருந்தது.பின் குழப்பம், கலக்கம், முடிவும் எடுக்கமுடியாமல் தவித்தேன் இவர் கடித்த்தில். இது மாதிரி, operchunety and rich experienceகிடைப்பது அரிதுஎன்றும்,பணச்செலவைப்பார்க்கக்கூடாது என்றும்,இதைத்தவிர விடுவது புத்திசாலித்தனமல்ல, என்று என்னை சம்மதிக்க வைத்தார். நான் தனியாக வீட்டை காலி பண்ணி,Passport, visa, வாங்கி,தனியாக நலு குழந்தைகளையும்,  எப்படி அழைத்துப்போவது என கலங்கிய போது, இவர் " உனக்கு கடித த்தில் என்னன்ன செய்யவேண்டும், எப்படிச்செய்யவேண்டும்,என்று எழுதுகிறேன் என்று தைர்யம் கொடுத்தார்.
                         என் பிறந்தவீட்டு மனிதர்களோ" இது மதுரை to தூத்துக்குடி அல்ல, " என்றும்,
நாடுவிட்டு, நாடு செல்வது என்பது சுலபமல்ல, என்று பயத்துடன் சொன்னார்கள்.  இதற்கிடையில் இரண்டு வருடமாகவே postel tuition ல் என்னை  SSLC வரை படிக்க ஏற்பாடு பண்ணிவிட்டுத்தான்போனதால், ஆக குடும்ப பாரத்துடன் என் படிப்பு வேறு. தலையைப்பிய்த்துக்கொண்டேன  என் மூத்த பெண் பத்மாவையும் அழைத்துச்செல்ல விடாமுயற்சி செய்தார் முடியவில்லை.என் அக்காவடம் விட்டுச்சென்றேன். முன் செய்த புண்ணியம் பின் வந்து காக்கும் என்பார்கள்.அது போல் நான் என் அண்ணா பையனைபடிக்க வைத்துக்கொண்டேன். என்பெண்ணைபடிக்கஅக்காவைத்துக்கொண்டுவிட்டாள். இருப்பினும் அவளை அழைத்துச்செல்லவில்லையே என்ற துக்கம் எனக்கு. US செல்லும்பொழுது நான் அழுதுகொண்டேதான் சென்றேன் கெட்டிக்காரப்பெண், என் அக்காவின் பெரிய குடும்பத்தில் பக்குவமாய் நடந்து கொண்டு
  நல்ல பெயர் எடுத்து, படிப்பில் நல்ல மதிப்பெண்களும் பெற்றாள்.


             
               மூன்று குழந்தைகள் , வயது 13, 11, 8 , என் வளர்ப்பா அல்லது நான் செய்த புண்ணியமா,
தெரியாது. சொன்னால் சொன்னபடி கேட்ப்பார்கள். (இன்றும் அப்படித்தான்ஆகையால். எனக்கு
தொல்லையில்லை.) நான் ரயிலிலேயே தனியாய் போனது கிடையாது. மூன்று குழந்தைகள்
6பெட்டிகள் ( US சமான்கள்)  என்று மும்பைக்கு, தனியாய் சென்றேன். அங்கு ஸ்டேஷனுக்கு
என் அண்ணா வந்து அழைத்துப்போனார்.மும்பயைப்பார்த்து மலைத்துத்தான் போனேன்
அடுக்குமாடிக்கட்டிடங்களும், அடுக்கடுக்காய் அலைகளும், ஆஹா என அதிசயமாய் இருந்தது.
என் அண்ணாவோ இது என்ன, நீ Newyork கே பார்க்கப்போகிறாய் ,என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அதற்கு எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்ல 1963ல் மிகமிக சிலரே USசென்றார்கள்.


       
      என் அண்ணா, தன் மனைவியின் உறவினர் வீட்டிற்கு, என்னையும் குழந்தைகளையும் அழைத்துச்சென்றார்.  அவர் Air Indiaவில் Ground engineear. .அவரிடம் planeல் என்னன்னகிடைக்கும், என்னன்ன இருக்கும் என்ற டிப்ஸ் கேட்டுக்கொண்டோம். ஆக எல்லா ஏற்பாடுகளும்
ஆயிற்று. என் மன்னி மூவரும் என்னை தனியாய் அனுப்புகிறோமே என அழ, என் அண்ணா, தன் நண்பர் சர்மா என்பவரிடம் லண்டனில் plane மாத்த ஏற்பாடு செய்திருப்பதாய்  சொல்ல,அவரின் நம்பரைக்  கொடுத்தார். தவிர எங்கள் plane ல் ப்ரயாணம் செய்யும் ஒரு மராட்டிக்காரரை எனக்கு  உதவுமாறு கேட்டுக்கொண்டார். அவர் பெயர் மஜும்தார்.ஆக  நாங்கள் plane ஏறினோம்
    Planeல் உடல் வியர்த்து பின் குளிரில் நடுங்காரம்பித்தது. நாங்கள் இதுவரை AC  Roomஐ  கூடப்பார்த்ததில்லை. இனி plane 
ஏறிவிட்டோம் எதுவந்தாலும் எதிர்கொள்ளவேண்டும். பின் வாங்கமுடியாதே என்ற பயம். சரி என்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். ஒரு சாரியில் மூன்று seat ம் முன்  வரிசையில் ஒன்றும் எங்களுக்கு. நானும், பாலாஜியும், உஷாவும், ஒரு வரிசையிலும், 
முன் வரிசையில் ரவியும் உடகார்நதோம். அபொழுதெல்லாம் நகைகளை customsஸில் கொடுத்து ,seal செய்து, Air hostes டம்
கொடுப்பார்கள். அவர்கள்தான் நம்மிடம் plane புறப்பட்டதும்நம்மிடம் கொடுப்பது  வழக்கம். அப்படி என் வைரத்தோடு, வைரமூக்குத்தி, வைத்த sealed boxயை  Airhostes என்னிடம் கொடுக்க, அதைத்திறந்தபோது என் மூக்குத்தி கீழேவிழ, உடனே
என் பிள்ளை ரவி,மேல்பட்டனை அமுக்கி  Airhostes ஐ கூப்பிட்டுவிட்டான். அவளும் உடனே ஆஜராக, அவளிடம், என்ன பேசுவது?
ஒத்திகை பார்க்காமல் ஆங்கிலத்தில் என்னால் பேசமுடியாதே? நான் திணற, அதற்குள் ரவியே,அதை தேடி  எடுக்க, அதைப்பார்த்த
Airhostes தன்னிடத்துக்குத்திரும்பினாள்!


                பின் பிளேன் புறப்பட்டது. அவள் கையை , தலையை ஆட்டி தன் கடமையை முடித்த பின் சில மணி நேரத்தில், இரு
பெண்மணிகள் மயில் நடையில் ஒரு டிரேயல், Croissaint, Frenchfrys, ketchup Icecream, Fruits அத்துடன் gift ஆக,ஒரு
Tea box, one box of cigarets and Chocolate bar!!! அப்புழுது மனிதர்களை அப்படி வரவேற்தாரகள்!,! Croissant ஐ இதற்குமுன் பார்த்ததில்லை, அது மீன் போல் செதில்களுடன் காணப்பட்டத்தால்  அதை ஒதிக்கிவிட்டோம், தமிழ் நாட்டில் அந்தக்காலத்தல்
Ketchup  கிடையாது, ஆக அது , ஆட்டுரத்தமோ என அதையும் ஒதுக்கி, ice cream and fruits சாப்பிட்டோம். ரவி எங்கள் எல்லோருடைய  சிகரட்டையும் தன் பக்கத்திலுள்ள அமெரிக்க தம்பதிகளுக்கு கொடுத்தான். அவர்கள் மகிழ்ந்துபோனார்கள்.
அந்த சமயோசிதம் ரவிக்குத்தான் வரும்.( இப்பொழுதும் அவன் குணம் அப்படித்தான்)

                          பாலாஜி பாத்ரூம் செல்லவேண்டுமென்றதால் அவனை  அழைத்துக்கொண்டு சென்றேன். Airhostes பாத்ரூம் கதவுத்திறந்துவிட்டாள் , நான் உள்ளே சென்று கதவை மூடயதும்,  ஒரே வெளிச்சம், பகலவன் ப்ரத்யக்ஷ்க்ஷம் ஆனமாதிரி,
எனக்குத்தூக்கிவாரிப்போட, பாலாஜி என்னைக்கட்டிக்கொள்ள, ஒருவழியாய் சமாளித்தேன். பின் fleshoutஐ எப்படி operate
செய்வது?  நான் இதுவரை பார்த்தது Indian closet தான், western commode பார்த்ததில்லை , திரும்ப ஓரு தயக்கம், பின் 
ஒருவழியாய் switch அமுத்த, அது காட்டெருமைபோல கத்த, திரும்ப எங்களுக்கு ஒரு சோதனை!! ஒருவழி.ஆய் பாத்ரூமைவிட்டு
 வெளியே வந்தோம்.
(தொடரும்)