Monday 1 February 2016

4. சிறு வயதுமுதல் வாழ்கையின் விளிம்புவரை. பக்கம் 4

பலகஷ்டங்கள் இடைஞ்சல்கள்  சுகங்கள் என மாறி, மாறி வந்தன.மனம்  ஒடிந்து போவதும் பின் தலை நிமிர்ந்து நிற்பதுமாக பத்து மாத காலம் ஓடியது. இவரிடமிருந்து பத்துபக்கக்கடிதம் ஒன்றுவந்தது. அதில் எங்களை US அழைத்துப்போவது பற்றி இருந்தது.பின் குழப்பம், கலக்கம், முடிவும் எடுக்கமுடியாமல் தவித்தேன் இவர் கடித்த்தில். இது மாதிரி, operchunety and rich experienceகிடைப்பது அரிதுஎன்றும்,பணச்செலவைப்பார்க்கக்கூடாது என்றும்,இதைத்தவிர விடுவது புத்திசாலித்தனமல்ல, என்று என்னை சம்மதிக்க வைத்தார். நான் தனியாக வீட்டை காலி பண்ணி,Passport, visa, வாங்கி,தனியாக நலு குழந்தைகளையும்,  எப்படி அழைத்துப்போவது என கலங்கிய போது, இவர் " உனக்கு கடித த்தில் என்னன்ன செய்யவேண்டும், எப்படிச்செய்யவேண்டும்,என்று எழுதுகிறேன் என்று தைர்யம் கொடுத்தார்.
                         என் பிறந்தவீட்டு மனிதர்களோ" இது மதுரை to தூத்துக்குடி அல்ல, " என்றும்,
நாடுவிட்டு, நாடு செல்வது என்பது சுலபமல்ல, என்று பயத்துடன் சொன்னார்கள்.  இதற்கிடையில் இரண்டு வருடமாகவே postel tuition ல் என்னை  SSLC வரை படிக்க ஏற்பாடு பண்ணிவிட்டுத்தான்போனதால், ஆக குடும்ப பாரத்துடன் என் படிப்பு வேறு. தலையைப்பிய்த்துக்கொண்டேன  என் மூத்த பெண் பத்மாவையும் அழைத்துச்செல்ல விடாமுயற்சி செய்தார் முடியவில்லை.என் அக்காவடம் விட்டுச்சென்றேன். முன் செய்த புண்ணியம் பின் வந்து காக்கும் என்பார்கள்.அது போல் நான் என் அண்ணா பையனைபடிக்க வைத்துக்கொண்டேன். என்பெண்ணைபடிக்கஅக்காவைத்துக்கொண்டுவிட்டாள். இருப்பினும் அவளை அழைத்துச்செல்லவில்லையே என்ற துக்கம் எனக்கு. US செல்லும்பொழுது நான் அழுதுகொண்டேதான் சென்றேன் கெட்டிக்காரப்பெண், என் அக்காவின் பெரிய குடும்பத்தில் பக்குவமாய் நடந்து கொண்டு
  நல்ல பெயர் எடுத்து, படிப்பில் நல்ல மதிப்பெண்களும் பெற்றாள்.


             
               மூன்று குழந்தைகள் , வயது 13, 11, 8 , என் வளர்ப்பா அல்லது நான் செய்த புண்ணியமா,
தெரியாது. சொன்னால் சொன்னபடி கேட்ப்பார்கள். (இன்றும் அப்படித்தான்ஆகையால். எனக்கு
தொல்லையில்லை.) நான் ரயிலிலேயே தனியாய் போனது கிடையாது. மூன்று குழந்தைகள்
6பெட்டிகள் ( US சமான்கள்)  என்று மும்பைக்கு, தனியாய் சென்றேன். அங்கு ஸ்டேஷனுக்கு
என் அண்ணா வந்து அழைத்துப்போனார்.மும்பயைப்பார்த்து மலைத்துத்தான் போனேன்
அடுக்குமாடிக்கட்டிடங்களும், அடுக்கடுக்காய் அலைகளும், ஆஹா என அதிசயமாய் இருந்தது.
என் அண்ணாவோ இது என்ன, நீ Newyork கே பார்க்கப்போகிறாய் ,என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அதற்கு எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்ல 1963ல் மிகமிக சிலரே USசென்றார்கள்.


       
      என் அண்ணா, தன் மனைவியின் உறவினர் வீட்டிற்கு, என்னையும் குழந்தைகளையும் அழைத்துச்சென்றார்.  அவர் Air Indiaவில் Ground engineear. .அவரிடம் planeல் என்னன்னகிடைக்கும், என்னன்ன இருக்கும் என்ற டிப்ஸ் கேட்டுக்கொண்டோம். ஆக எல்லா ஏற்பாடுகளும்
ஆயிற்று. என் மன்னி மூவரும் என்னை தனியாய் அனுப்புகிறோமே என அழ, என் அண்ணா, தன் நண்பர் சர்மா என்பவரிடம் லண்டனில் plane மாத்த ஏற்பாடு செய்திருப்பதாய்  சொல்ல,அவரின் நம்பரைக்  கொடுத்தார். தவிர எங்கள் plane ல் ப்ரயாணம் செய்யும் ஒரு மராட்டிக்காரரை எனக்கு  உதவுமாறு கேட்டுக்கொண்டார். அவர் பெயர் மஜும்தார்.ஆக  நாங்கள் plane ஏறினோம்
    Planeல் உடல் வியர்த்து பின் குளிரில் நடுங்காரம்பித்தது. நாங்கள் இதுவரை AC  Roomஐ  கூடப்பார்த்ததில்லை. இனி plane 
ஏறிவிட்டோம் எதுவந்தாலும் எதிர்கொள்ளவேண்டும். பின் வாங்கமுடியாதே என்ற பயம். சரி என்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். ஒரு சாரியில் மூன்று seat ம் முன்  வரிசையில் ஒன்றும் எங்களுக்கு. நானும், பாலாஜியும், உஷாவும், ஒரு வரிசையிலும், 
முன் வரிசையில் ரவியும் உடகார்நதோம். அபொழுதெல்லாம் நகைகளை customsஸில் கொடுத்து ,seal செய்து, Air hostes டம்
கொடுப்பார்கள். அவர்கள்தான் நம்மிடம் plane புறப்பட்டதும்நம்மிடம் கொடுப்பது  வழக்கம். அப்படி என் வைரத்தோடு, வைரமூக்குத்தி, வைத்த sealed boxயை  Airhostes என்னிடம் கொடுக்க, அதைத்திறந்தபோது என் மூக்குத்தி கீழேவிழ, உடனே
என் பிள்ளை ரவி,மேல்பட்டனை அமுக்கி  Airhostes ஐ கூப்பிட்டுவிட்டான். அவளும் உடனே ஆஜராக, அவளிடம், என்ன பேசுவது?
ஒத்திகை பார்க்காமல் ஆங்கிலத்தில் என்னால் பேசமுடியாதே? நான் திணற, அதற்குள் ரவியே,அதை தேடி  எடுக்க, அதைப்பார்த்த
Airhostes தன்னிடத்துக்குத்திரும்பினாள்!


                பின் பிளேன் புறப்பட்டது. அவள் கையை , தலையை ஆட்டி தன் கடமையை முடித்த பின் சில மணி நேரத்தில், இரு
பெண்மணிகள் மயில் நடையில் ஒரு டிரேயல், Croissaint, Frenchfrys, ketchup Icecream, Fruits அத்துடன் gift ஆக,ஒரு
Tea box, one box of cigarets and Chocolate bar!!! அப்புழுது மனிதர்களை அப்படி வரவேற்தாரகள்!,! Croissant ஐ இதற்குமுன் பார்த்ததில்லை, அது மீன் போல் செதில்களுடன் காணப்பட்டத்தால்  அதை ஒதிக்கிவிட்டோம், தமிழ் நாட்டில் அந்தக்காலத்தல்
Ketchup  கிடையாது, ஆக அது , ஆட்டுரத்தமோ என அதையும் ஒதுக்கி, ice cream and fruits சாப்பிட்டோம். ரவி எங்கள் எல்லோருடைய  சிகரட்டையும் தன் பக்கத்திலுள்ள அமெரிக்க தம்பதிகளுக்கு கொடுத்தான். அவர்கள் மகிழ்ந்துபோனார்கள்.
அந்த சமயோசிதம் ரவிக்குத்தான் வரும்.( இப்பொழுதும் அவன் குணம் அப்படித்தான்)

                          பாலாஜி பாத்ரூம் செல்லவேண்டுமென்றதால் அவனை  அழைத்துக்கொண்டு சென்றேன். Airhostes பாத்ரூம் கதவுத்திறந்துவிட்டாள் , நான் உள்ளே சென்று கதவை மூடயதும்,  ஒரே வெளிச்சம், பகலவன் ப்ரத்யக்ஷ்க்ஷம் ஆனமாதிரி,
எனக்குத்தூக்கிவாரிப்போட, பாலாஜி என்னைக்கட்டிக்கொள்ள, ஒருவழியாய் சமாளித்தேன். பின் fleshoutஐ எப்படி operate
செய்வது?  நான் இதுவரை பார்த்தது Indian closet தான், western commode பார்த்ததில்லை , திரும்ப ஓரு தயக்கம், பின் 
ஒருவழியாய் switch அமுத்த, அது காட்டெருமைபோல கத்த, திரும்ப எங்களுக்கு ஒரு சோதனை!! ஒருவழி.ஆய் பாத்ரூமைவிட்டு
 வெளியே வந்தோம்.
(தொடரும்)


   

No comments:

Post a Comment