Sunday 22 November 2015

3. சிறு பிராயமுதல் வாழ்வின் விளிம்புவரை. பக்கம் 3

 பின் நாலு குழந்தைகளுக்கு பின் அழகான் பெண் உஷா பிறந்தாள். என் மாமனார் அடிக்கடிசொல்வார்," நான் சென்ற பின்தான் கிருஷ்ணமூர்த்திக்கு நல்ல காலம் பிறக்கும் என"அவர்ஆசியும், பெண் பிறந்த வேளையும்,இவருக்கு PhD பண்ண ஒரு scolership கிடைத்தது.
அதற்கு போகவேண்டுமானால் தற்பொழுது வேலையில் இருக்கும் காலேஜில் லீவு கொடுக்கவேண்டும்,தவிர இப்பொழுது வாங்கும் சம்பளம் போதாமல்  tuition சொல்லிக்கொடுத்து, அந்தவருவாயில் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.இங்குள்ள ₹ 400. 00 வருமானமே கஷ்டநிலை.
அங்கு Scolership ₹ 200.00 தான். அதில் குடித்தனம் பண்ண முடியுமா? புதிய. ஊர் , விலைவாசி எப்படியோ? இங்கு தெரிந்த நண்பர்களிடம் கைமாத்து வாங்கலாம். அங்கு யாரையும் தெரியாது.எல்லாவற்றையும், என் அப்பாவிடமும், இவரின் நண்பர் ஒப்பிலியிடமும், கலந்து ஆலோசிப்போம்.
நாள் நகருமே தவிர,ஒரு முடிவுக்கும் அவர் முடியாது. ஒப்பிலி, "சார் நான் உங்களிடத்தில் இருந்தால் நான் போகமாட்டேன் எனக்கு தைர்யம் இல்லை "என்பார்.என் அப்பாவோ பணத்தால் என்னால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை , தேகத்தால் எது வேண்டுமானாலும்செய்கிறேன்" என்றார். என் அப்பா என்ன செய்வார் 9 குழந்தைகளை கடன் இல்லாமல்கரையேத்தியவர். நாட்கள் நகர்ந்து,முடிவு எடுக்கமுடியாமல் தவித்தோம்.கடைசியில்
வந்த வாய்ப்பை தவற விட்டு, பின் வாழ்நாள் பூராவும் வருத்தப்படுவதை விட, வந்தது வரட்டும்வருவதை எதிர்கொள்வதுஎன முடிவெடுத்தேன்  நான் தைர்யம் கொடுத்ததும்,  VKயும் எதிர்த்துப்போராடுவோம் என கை கொடுத்தார்.

 மதுரையில் இருந்து சிதம்பரம் சென்றோம் நாலுகுழந்தைகளுடன். இவரின் நண்பர்
திரு. கணேசன், நாங்கள் வரும்பொழுது, அவர்கள் வீட்டில் தங்கி பின் எங்கள் வாடகைவீட்டை
சுத்தம் செய்தபின் நாங்கள் குடி போகலாம் என்று சொல்லியிருந்தார். அதனால் அவர் வீட்டுக்கு
குதிரைவண்டியில் சென்றோம். அவர் வீட்டை நெருங்கும்போதுதான் தெரிந்தது , முதல் நாள் அவர்
தாயார் தவறிய செய்தி. பின்நாங்கள் பார்த்த வாடகை வீட்டிற்கு சென்று, வீட்டைச்சுத்தம் செய்து, பின் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வரவழைத்துச்சாப்பிட்டோம். அதுவரை குடுமிவைத்துக்கொண்டிருந்தவர், புது இடம் வந்ததும் கிராப் செய்துகொண்டார். என் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. பல நாள் நான் ஆசைப்பட்டது, நிறைவேறியது. அந்த சந்தோஷம் மறு நாளே காணாமல் போனது. மறு நாள் காலேஜ் சென்று கையெழுத்துப்போட்டு , Join பண்ணினார். முதல் நாள் சென்று வந்தவருக்கு,மறு நாளே நல்ல ஜுரம். நாலு நாள் ஜுரத்துக்குப்பின், நீர்குளுவான் அம்மை கண்டது.ரொம்ப கடுமையாய் இருந்தது. புது இடம் வேற அம்மை கண்டதால் ஆஸ்ப்பத்திரிசெல்லக்கூடாது என்ற காலம் அது.  என் வயது 25 , அநுபவமில்லாத வயது. இப்படிக்குழம்பித்தவித்தபோது, மற்ற மூன்று குழந்தைகளுக்கும் அம்மை கண்டுவிட்டது.அப்பொழுது என் குடும்பம், நடுக்கடலில் தத்தளித்த படகு மாதிரி இருந்தது. ஒரு ஆறுதல்என் அப்பா என் கூட இருந்தார். அப்பொழுது அவர் வயது 75. ஒரு மாதம் குடும்பம் த த்தளித்தாலும்ஆண்டவன் உயிர்ச்சேதமில்லாமல் எங்களை கறைஏத்தினார். அவருக்கு அனந்த கோடி நமஸ்க்காரம்
               அந்த வீடு  பெரிய ரோடில், போக்குவரத்துச்சத்ததுடன் வசதியல்லாமல் இருந்தது.வாடகையும் ₹45-0-0 , பின் இவவரின் நண்பரின் மூலம், வாடகை ₹25-0-0 ஒரு வீடு கண்டுபிடித்து,குடிபோனோம். அங்குதான் டிகிரி முடிக்கும்வரை இருந்தோம். டிகிரி முடித்த,கதையைVK யின் blog ல் கண்டறியலாம்.  பின் மதுரைக்கு வந்தோம் இங்கு வந்து, பத்து மாத்ததுக்கெல்லாம், இவருக்கு Urbanaஎன்னும் univercityல் வேலை கிடைத்தது. திரும்பவும் எங்களுக்குக்குழப்பம். இப்பொழுதுசெல்வதா? வேண்டாமா?  வேண்டாம் என்றால் ஏன் அதற்கு முயற்ச்சி செய்தோம்?
ஆக போகவேண்டும், போனால் Experience  + பணம் கொஞ்சம் கையில் கிடைக்கும்,
இப்பொழுது குடும்பம் எங்கு இருக்கும் ? எங்களுக்குத்துணை யார்? என்னால் குடும்பபாரம்,,
முழுவதும் ஏற்று நடத்த முடியுமா? திரும்ப என் அப்பா, அண்ணாக்களுடன் ஆலோஜனைக்குப்பின்
நான் தனியாக குழந்தைகளுடன் மதுரையிலேயே இருப்பது, என் அப்பா துணைக்கு இருப்பார் என்றும்,என் மன்னியும் அவள் பெண்ணும் எங்கள் கூட இருந்தால் சற்று உதவியால் இரக்குமெனவும், தீர்மானம் செய்து விட்டு VK.   பின் US சென்றார். அவர் சென்றது Full bright
Scolership ல் . ஒரு மாதம் கப்பலில் செல்லவேண்டும். வேலையையும், விட்டாய்விட்டது,
புது வேலையிலும் சேரவில்லை. ஒரு இடத்திலும் சம்பளம் கிடையாது. கடன் வாங்கி குடும்பத்தை
நடத்த ஏற்பாடு செய்து விட்டு கப்பலில் சென்றார்.


தொடரும்்

No comments:

Post a Comment