Thursday 19 November 2015

2. சிறு பிராயம் முதல் வாழ்க்கையின் விளிம்பவரை பக்கம் 2

நான் அப்பொழுது நிறைமாத கர்ப்பிணி,  என் கணவருக்கு காலேஜில் வேலை இருந்ததாலும், ஒரு இங்கிலீஷ் playல் lady carectorல் நடிப்பதாலும், என்னை,என் மாமனார் chekupக்கு அழைத்துச்சென்றார்.என்னை பரிசோதித்த டாக்டர், என்னை உடனே admit பண்ண வேண்டும் என்று சொன்னதால் , என்னை admit பண்ணி விட்டு என்மாமனார் வீடு சென்றார்.அந்தக்காலத்தில் phone வசதியோ, காலேஜில் contact பண்ணுவதோ முடியாத, தெரியாத, காலம்.நான் தனியாய் பிரஸவவலியில்  இருக்கும்பொழுது, என் கணவர் Playல் கை தட்டலுடன் நடித்துக்கொண்டிருந்தார்.இதில் யாரையும் குத்தம்சொல்லவொ,குறை கூறவோமுடியாது. அந்தக்காலத்தில் அப்படித்தான் நடக்க முடிந்தது. பின் 1951 ல் ரவி பிறந்தான். என் நாத்தனார் குடும்பமும்எங்களுடன் இருந்தது . டவுன் வாசம், இடம் பற்றாக்குறை, எல்லாவற்றையும் நினைத்து  அவர்களை ஒரு  கிராமத்தில் வைத்தோம். எல்லாம் என் கணவர்தான்செய்யவேண்டியிருந்தது. என்  மைத்துனர் வடக்கே இருந்ததால் அவரால் உதவ முடியவில்லை. என் நாத்தனார் பெண்களை , பெண்பார்க்கும் படலமா நாங்கள் இருவர்தான். கல்யாண ஏற்பாடா  நாங்கள் இருவர்தான்.,ஒரு பையில் துணி மணிஎடுத்துக்கொண்டு,புறப் பட்டு விடுவோம். பையிலும் கனம் கிடையாது, ஏன் பர்ஸிலும் கனம் கிடையாது!!  ஆக ஒவ்வொரு பெண் கல்யாணமாய் நடத்தினோம்.. அந்த சமயத்துக்குத்தான் என் மைத்துனரால் வர முடிந்தது. அவரின் சூழ்நிலை அப்படி.        

 பின் என் கணவர் IAS exam எழுத சென்னை சென்றார்அப்பொழுது என் மாமனாரும்  நானும் இருந்தோம். அப்பொழுது என் கணவரின் சினேகிதர் ஒப்பிலி என்பவர் ( என்கணவரும் அவரும் ஒரே காலேஜில் வேலை பார்ப்பவர்கள்) . அவர் தனக்கு கல்யாணம் ஆகி புதுக்குடித்தனம் செய்ய
வீடு பார்த்திருப்பதாயும்,  அது தனி flat and modern ஆக இருப்பதாலும், மோட்டார் மூலம் பைப்பில் ஜலம் வரும் என்றும், என் மாமனாரிடம் சொல்ல, என் மாமனார் என் இஷ்டம் என்ன என்று கேட்க, நான் VK யிடம்  கேட்காமல் எப்படி என யோஜிக்க, நீ தான் கிரஹலக்ஷ்மி அவன் என்ன சொல்லப்போகிறான் என்று என்மா மனார்சொல்ல ஆக எட்டு மாத கர்பிணியான , நானும்
 70 வது வயது கிழவரான என் மாமனாரும் வீடு மாற்றினோம்.

        ஆஹா சிமண்ட் தரையென்ன, மோட்டார்மூலம் பைப்பில் தண்ணீர் என்ன,நல்ல காற்று வேறு என ஆனந்தப்பட்டோம். ஒரு மாதத்தில் மோட்டார் காலை வாரி விட, வீட்டுக்காரன் ரிப்பேர் உங்கள் செலவு எனச்சொல்ல, எங்கள் ஒருவரிடமும் அதற்கு வேண்டிய பணவசதி இல்லாத காரணத்தால் கிணறுதான் கை கொடுத்தது.  தண்ணீருக்கு! இரவு கொசுக்கடி, அதறகுத்துணையாய் மூட்டைப்பூச்சி வேறு! இவைகளை மறக்க வாசலில் புஷ்பம் போடவும், காய்கறி போடவும் இடம் இருந்தது. அதில்ஆனந்தப்பட்டோம்.  அப்பொழுது என் நாத்தனார் லக்ஷமியின் கணவர் மிக உடல் நலம் சரியில்லாமல் (plurisy) இருந்ததால் என் மாமனார் தன் பெண் குடும்பத்தை எங்களிடம் அழைத்து    வந்தார். வருவாய் வாய்க்கும், கைக்கும் போதாத வருமானம். இப்பொழுது இரண்டு  குடும்பம்(10பேர்கள்) ரேஷன் காலம் அரிசி கிடைக்காது. ரேஷனில் கொடுக்கும் கோதுமையை வைத்து சமாளிக்க வேண்டும். என் மாமியாரின் தங்கை தன் அக்கா பெண்ணுக்கு ஆறுதல் கூற எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். என் நாத்தனாருக்கும், தன் கணவன் உடல்நிலையை கூறி  ,ஆறுதல் பெற ஒருவர் வேண்டும். ஞாயமான கோரிக்கைதான். ஆனால் என் பாடு "இருதலைக்கொள்ளி எறும்பு" நான் எட்டு மாத கர்ப்பிணி, வறுமையின் வளர்ச்சியில் குடித்தனம்,  வேளைக்கு ஏதாவது சமைத்துப்போட வேண்டும்,( அது என் கடமை) செய்யவும் உடல் இடம்கொடுக்காமல், செய்யாமலும் இருக்க முடியாமல் பூலோக நரகமாய்  அனுபவித்த காலம்அது. கொஞ்ச நாளில் என் நாத்தனார் கணவர் காலமானதும் அந்தக் குடும்பத்தையும் காப்பாத்த வேண்டிய கடமையும் சுமையும் என்  மாமனார் தலையில் விழுந்தது.

இப்படி பல மாதங்கள் உருண்டோட குடும்பநிலை ஒரு  நிலைக்கு வர கடவுள் இவர்க்ளை இப்படி விடக்கூடாது என்று எண்ணினாரோ என்னமோ. மூத்தவன் ரவிக்கு (இரண்டு வயது )கடுமையான காய்ச்சல் வர, திரும்ப டாக்டரிடம் ஓட அவனுக்கு poison typphoid  என்று கண்டுபிடித்துச்சொல்ல, யாரும் பக்கத்தில் செல்லாமல் தனிமைப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம்.  பத்து  நாட்கள் பட்ட அவஸ்தைக்குப்பின் ஜுரம் இறங்காமல் டாக்டர் கையைவிரித்து  உறவினர்களுக்குத்த்தெரியப்படுத்தலாம் என்றும் சொல்ல இவர் என் பிறந்தகத்து மனிதர்களுக்கு தகவல் எழுத அவர்களும் வந்து பார்த்தார்கள்.

VK  இனி பகவான் தான் துணை  என்று வால்மீகி ராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட ( அவர் தந்தை குறித்துவைத்திருந்த படி) ஒரு சர்க்கத்தை 48 நாள்  பாராயணம் பூஜை முதலியவை செய்து, 48 நாளும் அகண்டதீபம் எரியும்படியும் செய்தோம். (இரவு பகல் தீபத்துக்கு எண்ணை விட்டு அதை காப்பாற்றினோம்). எங்களால் ஆனதைச்செய்தோம். அக்கம்பக்கம் உள்ளவர்களில் சிலர் இதைப்பார்த்து பரிதாபப்பட்டும் சிலர் பரிகாசமாகச்சிரிப்பவர்களுமாக இருந்தனர்.  கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு சாட்சியாக ரவி கண் முழித்து ஜுரமும் இறங்கி நலம் பெற்றது விந்தையே. டாக்டரும் இதை ஒரு miracle  என்று தான் சொன்னார்.
மறுபடியும் இரண்டரை வயதாகும்போது  அவன் (ரவி) . அடிக்கடி வலியால் அழுவான். டாக்டரிடம் காட்டியதில் அவனுக்குHernia என்றும் operation செய்யவேண்டுமெனவும் கூற, 13 நாட்கள் ஆஸ்ப்பத்திரியில் இருந்து operation ஆயிற்று. ( அப்பொழுதெல்லாம் அது major operation) இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணம்.

              பத்து மாத இடைவெளிக்குப்பிறகு  இரண்டாவது பிள்ளை  பாலாஜிக்கு urine  போகமுடியாமல் ஏகவலி. டாக்டரிடம் காட்டியதில் beriam test, இன்னும் பலபல சோதனைகளை செய்து, right kindney ல், ஒரு tumerஉள்ளதாலும் , அதை operetion செய்ய வேண்டுமென சொல்ல, அவனுக்கு இரண்டரை வயதுஎப்படித்தாங்குவான் என,  நானும், என் கணவரும் கதி கலங்க, இதற்குப்பணத்திற்கு எங்கே போவது என குழம்ப, கடைசியில் எங்கள் குலதெய்வத்தின் அருளால் எங்கள் குடும்ப டாக்டர் தன் குருவான பெரிய டாக்டரிடம், இந்த தம்பதியர்கள்மூத்த  பிள்ளையின் Herenya operetion மூலம் ஆடிப்போயிருக்கிறார்கள், இந்த operetionஐ , குழந்தை தாங்குமா? என்பதை விட,இவர்களால்
தேகத்தாலும், மனத்தாலும், பணத்தாலும்,தாங்க முடியுமா என்பது கேள்விக்குறி, என்று சொல்லி,தான் சில, மருந்துகள் மூலம் சில மாத வைத்தியத்தில், குணப்படுத்த முடியும், என உறுதி கூற,கடைசியில் தினம் ஒரு lnjection  (Comycin) ஒரு மாதமும், இரண்டாவது மாதம் ஒன்றுவிட்டு ஒரு நாள் வீதமும், மூன்றாவது மாதம் வாரம் ஒரு முறையும், இப்படி மாதக்கணக்கில் வைத்தியம் செய்தபின் குழந்தை பிழைத்தான். அதன்பிறகு அவன் உடம்பைத்தேற்ற பலமாதங்கள் உழைத்தோம் என்பது வேறு விஷயம்.   ஆக இவ்வளவு வியாதிப்புயலுக்குப்பின் ( எங்கள் இருவருக்கும் 1947 இலிருந்து 1956 வரையில் ஏழரை நாட்டுப்பீடை என்பது இருந்ததால்தான் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தீர்கள் என்று ஜோசியர்கள் சொல்லி தப்பித்துக்கொண்டார்கள் !)  பல மாதங்கள் உருண்டொடின. என் மாமனாரின் காலமும் அந்த வீட்டில் தான் ஆயிற்று.  அப்பொழுது நான் ஆறுமாத கர்ப்பிணி.

என் மாமனாரின் கடைசி நாள் அவர் காலமானபொழுது அவர் பகவ ந் நாமாவைச்சொல்லிக்கொண்டு தேகத்தை விட்ட கதை ஆங்கிலத்தில் இவரின் blog  இல் படிக்கவும்.
(தொடரும்)



              

No comments:

Post a Comment