Saturday 29 August 2015

.காசியப்பா store.

 அக்கா, திருச்சியில் காசியப்பா store  க்கு வந்தாள் அப்போது, காவேரி நீர் கணக்கில்லாமல் வரும்
(பிற்காலத்தில் குடம் கணக்குப்பண்ணி தண்ணீர் எடுத்த நாளும் உண்டு) அக்காவுக்கு டவுன் வாழ்க்கை  பக்கத்தாமெல்லாம் friends  அடுத்தாத்து ஜானகி மாமி, பக்கத்தாத்து மணி மாமி,
மில்லாத்து மாமியார், எதிர் வீட்டு ராஜாம்மாமி  என அக்காவுக்கு ஏக friends . அக்காவின்
இளமை வயது வேறு,கையில் தங்க வளையலுடன் பல கலர் கண்ணாடி வளையலகளும்
கையில் மினுமினுக்க,நிறுத்தி வைத்த மாதிரி மடிசார் கட்டும் தலையில் பிச்சோடாவும் மூக்கிலும்,
காதிலும் வைரம் மின்ன ,அக்கா மதுரை மீனாக்ஷஈ மாதிரி இருப்பாள்

                    மதியத்தில் மீனாக்ஷஈ யானாலும் 8மணிக்கு ஆபீஸ் செல்ல சாப்பிட உட்காருவார்
அத்திம்பேர், 7.30 மணிக்கு அரைக்கீரை வாங்கி வருவார்,அதைப்பார்த்து அக்கா,பல்லைக்கடிப்பதைப்பார்த்து அந்த நரசிம்ம ஸ்வாமியே ஆச்சர்யப்படுவார்அப்படிக்கடிப்பாள்
( அக்காவிக்கல்லவாதெரியும் அரைகீரையை ஆய்ந்து சமைக்க ஏற்படும் கஷ்ட்டம்?)
 ஒரு வழியாய் அத்திம்பேர் சாப்பிட்டு , ஏலம் கிராம்பு வாயில் அடக்கிக்கொண்டு, வேஷ்டி நுனியை, கையில் பிடித்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாய் ரயிலைப்பிடிக்க ஓடுவார்
( அவர் கஷ்ட்டம் அவருக்கு).


              அக்காவின் ஒவ்வொரு பிரஸவத்தின் போதும், என் அத்திம்பேர் சமையலுக்கு. மாமி
போடுவது வழக்கம். சுய ஜாதியாய் ( திருச்சிப்பக்கம் சொந்த ஊராய் ்இருந்தால் சிலாய்க்யம்)
கால்களில் வீக்கம் இல்லாமல் ( என் அத்திம்பேருக்கு யானைக்கால் என்றால் ரொம்ப பயம்)
சிரித்த முகமாய்  குறைந்த சம்பளத்தில் தேடுவார் . கிடைப்பது என்னமோ அரிதுதான், அதனால்
எல்லா நண்பர்களிடமும் சொல்லிவைத்திருப்பார்,   மாதம் ஓடிக்கொண்டிருக்கும் ஆனால்
மாமி கிடைக்கமாட்டாள் .  என் அம்மாவும் ,அக்காவும் அவஸ்த்தை படுவார்கள். மாமி கிடைத்தால்தான் என் அம்மா ஊர் திரும்ப முடியும். மாமி. தேடும் படலம் உச்சத்தில் இருக்கும்
இரண்டு மாத appointment க்குமூன்று மாத தேடல் !!!!

அக்காவின் அடுத்த ப்ரஸவத்ற்கு அத்திம்பேர் மூன்றாவது மாதமே சமயல்கார மாமி தேட
அது 6 மாத்த்தில் கிடைக்க , என் அம்மா reliving  cook கிடைத்துவிட்டாள் என சந்தோஷப்பட,
அம்மா ஊருக்குப்போனாலும் சமயலுக்கு மாமியார் இருக்கிறாள் என அக்கா அகமகிழ,
அத்தனையும் கண்களை விட்டு அகலாகாக்ஷஈகள்

         அக்கா உறவினர் யாராவது வந்தால் தக்க ஸன்மானம் செய்தி அஅனுப்புவதில் வல்லவள்
தன் பதியின் பொருளாதாரம் அப்பொழுது அக்காவுக்கு மறந்து விடும். கடையில் அடுத்த மாதம்
கொடுத்துவிடலாம் என,ரவிக்கைத்துணி வாங்கி உறவினரை உற்சாகப்படுத்தி அனுப்பி விடுவாள்
அடுத்த மாதம் அத்திம்பேர் கத்தோகத்து.  கத்த  அக்கா அதை சமாளிக்க, அது அக்காவைத்தவிர. வேறு
யாராலும் முடியாது.

    அனால்  அக்கா சாமர்த்தியம் யாருக்கும் வராது!! வந்த விருந்தினருக்கு செய்து போட்டு
எப்படித்தான் சமாளித்தாளோ?  இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை ,ஆனால் உள்ளிருப்பவர்களுக்குத்தான் தெரியும் இல்லை என்று!!       (தொடரும்)    

                                     

Tuesday 25 August 2015

கல்கண்டார்கோட்டை வந்தகதை

அத்திம்பேரைப்பற்றிய சிற்சில ஹாஸ்ய நினைவுகள் (தொடர்ச்சி)

                                       கல்கண்டார்கோட்டை வந்த கதை

கல்கண்டார்கோட்டை என்ற கிராம்த்தில் என் அத்திம்பேரின் அப்பா சீனுவாசய்யர்,ஒருவருக்கு வட்டிக்கு கடன் கொடுத்திருந்தார். அதை அவரால் திருப்பித்தரமுடியவில்லை. அதனால் அவர் சீனிவசய்யர் கடன்வாங்கியவர் கழுத்தைப்பிடிக்கவே அவர் இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால்
தன்னிடமுள்ள நிலத்தை தருவதாய் சொன்னதால், சீனுவாசய்யர் தன் பிள்ளையான, என் அத்திம்பேரிடம், பட்டுவின் நகையை விற்றால் முடியும் எனவும், அதில் கரும்புபோட்டால் காசைஅள்ளிவடலாம் எனவும், நாம் இந்த கிராம த்தில் நிலச்சுவான்தாராக (நிலத்துக்குச்சொந்தக்கார்ர்)
(மிராசுதார்) ்இருப்போம் என்றும் சொன்ன தால், அத்திம்பேர், நகையைவிற்று, நிலத்தை வாங்கினார்.  அதில் கரும்பு பயிரிட்டதிலும்,அதில் வருமான்தைக்கணக்குப்பண்ணி மகிழ்ந்ததில் ஆச்சர்யம் இல்லை.
                        கரும்பு விளைந்து, வெல்லம் செய்ய தயாரானதும் , கரும்பை சார் எடுத்து, காய்ச்சஒரு இடம்தேவைப்பட்டது. ஒரு இடம் வாடகைக்கு எடுத்தார். பின் கரும்பிலிருந்து,சாரெடுத்து, அதை பாகுகாய்ச்சி, வெல்லம் process  ல்எங்களுக்கெல்லாம் ஒரே குஷி. தினமும் கருப்பஞ்சாரும், வெல்லப்பாகும் கிடைக்கும்.
             
                          வெல்லம் வண்டியில் வீட்டுக்கு வந்தது. அதை நிறுத்து விலைக்குக்கொடுக்க தராசு ,படிக்கல் வாங்கியது. கிராம த்தில் உள்ளவர்கள் வெல்லம் வாங்கிச்செல்வதும், அப்பொழுது வருபவர்களுக்கு, அக்கா ,வாயில் வெற்றிலையுடன் ,மெட்டி ஒலி ஒலிக்க நடந்து வந்து, தராசை தன் மாமனாரிடம் கொடுப்பதும் அவர் நிறுத்து விலைக்குக்கொடுப்பதும் கண் கொள்ளாக்காட்சி.
                               
                     மாதம்  பல சென்றது. பாக்கிவெல்லம் விற்பனையாகாமல் தன்மணத்தைப்பரப்பிஆட்சிசெய்தது.அடுத்த வருடம் எள்ளு போட்டார்கள் ஆனால்புஞ்சையில்போடும் எள்ளை நஞ்சையில் போட்டதால் பலன் தர மறுத்துவிட்டது.இந்த நிலப்பரீட்சைவேண்டாம்என கைவிட்டுவிட்டார் என் அத்திம்பேர். சீனிவாசய்யர் தன் பிள்ளைக்கு சாமர்த்தியம் போதாது என திட்ட அடுத்த வருடம் ஒன்றும் போடாமல் விட்டு விட்டார். நகையும் போய், நிலமும் போனதுதான் மிச்சம்.

வெகு நாள் வரை திராசும் படிக்கல்லும், அத்திம்பேர்  நிலச்சுவான்தார் என்பதை,கட்டியம் கூறிக்கொண்டிருந்ததும் ,அக்காவின் அர்ச்சனைக்கு அத்திம்பேரை ஆளாக்கிக்கொண்டிருந்ததும் தனிக்கதை.

    அலைகள் தொடரும்





Monday 24 August 2015

அத்திம்பேரைப்.பற்றிய சிற்சில ஹாஸ்ய நினைவுகள்

 அப்பொழுது எனக்கு வயது 11 இருக்கும் 1942 war நடந்துகொண்டிருக்கும் சமயம்,எங்கள் குடும்பம்
கோயமுத்தூரிலிருந்து  மஹாதானபுரம் என்ற கிராமத்திற்குவந்தோம் (அம்மா,என் அண்ணன்கள்,
ஜயா,சீனா,சத்தி,மற்றும் நான் )லாரியில் ஜயா அண்ணா வந்தார் அவருக்கும் 18 வயது இருக்கலாம்
ஜயா அண்ணா ஒரு பொறுப்புள்ள பையன் என்பது என் அம்மாவின் ஆணித்தரமான நம்பிக்கை!!!
( அது சாத்தியமான உண்மை) இரவு 7  மணிக்கு லாரியுடன் வந்த அண்ணாநாங்கள் இன்னும்
வரவில்லைஎன்றதும்,ரயில் late  என்றதும், லாரி சாமானை திண்ணையில் இறக்கச்சொல்லிவிட்டு
எங்களை அழைத்து வர ரயிலடிக்கு வந்து விட்டார்!!   ஏனெனில் வரும் வழி ஒரே இருட்டு,தவிர,
வண்டிவசதி கிடையாது, திருட்டுபயம் வேறு. அம்மா வேறு வைரத்தோடும், கழுத்து நிறைய நகையுமாக வருகிறாள் ஆக, அண்ணாவைப்பார்த்ததும்தான் அம்மாவுக்கு உயிரே வந்தது
 பிறகு அண்ணாவுடன் வீடு வந்துசேர்தோம்.அது ஒரு பெரிய achievement .
இது தொடரும்

Sunday 23 August 2015

1. துதிக்கை வணக்கம்

துதிக்கையில், துதிக்கை, துணை, வருமே
I
உனை, நினைக்கையில், இனிக்கும், மனம், வருமே

முருகனுக்கு மறு பெயர் அழகன்.