Monday 24 August 2015

அத்திம்பேரைப்.பற்றிய சிற்சில ஹாஸ்ய நினைவுகள்

 அப்பொழுது எனக்கு வயது 11 இருக்கும் 1942 war நடந்துகொண்டிருக்கும் சமயம்,எங்கள் குடும்பம்
கோயமுத்தூரிலிருந்து  மஹாதானபுரம் என்ற கிராமத்திற்குவந்தோம் (அம்மா,என் அண்ணன்கள்,
ஜயா,சீனா,சத்தி,மற்றும் நான் )லாரியில் ஜயா அண்ணா வந்தார் அவருக்கும் 18 வயது இருக்கலாம்
ஜயா அண்ணா ஒரு பொறுப்புள்ள பையன் என்பது என் அம்மாவின் ஆணித்தரமான நம்பிக்கை!!!
( அது சாத்தியமான உண்மை) இரவு 7  மணிக்கு லாரியுடன் வந்த அண்ணாநாங்கள் இன்னும்
வரவில்லைஎன்றதும்,ரயில் late  என்றதும், லாரி சாமானை திண்ணையில் இறக்கச்சொல்லிவிட்டு
எங்களை அழைத்து வர ரயிலடிக்கு வந்து விட்டார்!!   ஏனெனில் வரும் வழி ஒரே இருட்டு,தவிர,
வண்டிவசதி கிடையாது, திருட்டுபயம் வேறு. அம்மா வேறு வைரத்தோடும், கழுத்து நிறைய நகையுமாக வருகிறாள் ஆக, அண்ணாவைப்பார்த்ததும்தான் அம்மாவுக்கு உயிரே வந்தது
 பிறகு அண்ணாவுடன் வீடு வந்துசேர்தோம்.அது ஒரு பெரிய achievement .
இது தொடரும்

1 comment:

  1. ஏன் பாதியில் நிருத்திவிட்டீர்கள்? மேலே சுல்லுங்கள் சித்தி, சொல்லுங்கள். உங்கள் நினைவலைகளை கேட்க ஓடோடிவந்த எங்களை ஏமாற்றாதீர்கள்
    மல்லிகா.
    கீழ்வருவது என்னுடைய ப்ளாக் சைட்ஸ். பார்க்கவும்
    https://sites.google.com/site/mallikarajancom/

    ReplyDelete