Tuesday 25 August 2015

கல்கண்டார்கோட்டை வந்தகதை

அத்திம்பேரைப்பற்றிய சிற்சில ஹாஸ்ய நினைவுகள் (தொடர்ச்சி)

                                       கல்கண்டார்கோட்டை வந்த கதை

கல்கண்டார்கோட்டை என்ற கிராம்த்தில் என் அத்திம்பேரின் அப்பா சீனுவாசய்யர்,ஒருவருக்கு வட்டிக்கு கடன் கொடுத்திருந்தார். அதை அவரால் திருப்பித்தரமுடியவில்லை. அதனால் அவர் சீனிவசய்யர் கடன்வாங்கியவர் கழுத்தைப்பிடிக்கவே அவர் இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால்
தன்னிடமுள்ள நிலத்தை தருவதாய் சொன்னதால், சீனுவாசய்யர் தன் பிள்ளையான, என் அத்திம்பேரிடம், பட்டுவின் நகையை விற்றால் முடியும் எனவும், அதில் கரும்புபோட்டால் காசைஅள்ளிவடலாம் எனவும், நாம் இந்த கிராம த்தில் நிலச்சுவான்தாராக (நிலத்துக்குச்சொந்தக்கார்ர்)
(மிராசுதார்) ்இருப்போம் என்றும் சொன்ன தால், அத்திம்பேர், நகையைவிற்று, நிலத்தை வாங்கினார்.  அதில் கரும்பு பயிரிட்டதிலும்,அதில் வருமான்தைக்கணக்குப்பண்ணி மகிழ்ந்ததில் ஆச்சர்யம் இல்லை.
                        கரும்பு விளைந்து, வெல்லம் செய்ய தயாரானதும் , கரும்பை சார் எடுத்து, காய்ச்சஒரு இடம்தேவைப்பட்டது. ஒரு இடம் வாடகைக்கு எடுத்தார். பின் கரும்பிலிருந்து,சாரெடுத்து, அதை பாகுகாய்ச்சி, வெல்லம் process  ல்எங்களுக்கெல்லாம் ஒரே குஷி. தினமும் கருப்பஞ்சாரும், வெல்லப்பாகும் கிடைக்கும்.
             
                          வெல்லம் வண்டியில் வீட்டுக்கு வந்தது. அதை நிறுத்து விலைக்குக்கொடுக்க தராசு ,படிக்கல் வாங்கியது. கிராம த்தில் உள்ளவர்கள் வெல்லம் வாங்கிச்செல்வதும், அப்பொழுது வருபவர்களுக்கு, அக்கா ,வாயில் வெற்றிலையுடன் ,மெட்டி ஒலி ஒலிக்க நடந்து வந்து, தராசை தன் மாமனாரிடம் கொடுப்பதும் அவர் நிறுத்து விலைக்குக்கொடுப்பதும் கண் கொள்ளாக்காட்சி.
                               
                     மாதம்  பல சென்றது. பாக்கிவெல்லம் விற்பனையாகாமல் தன்மணத்தைப்பரப்பிஆட்சிசெய்தது.அடுத்த வருடம் எள்ளு போட்டார்கள் ஆனால்புஞ்சையில்போடும் எள்ளை நஞ்சையில் போட்டதால் பலன் தர மறுத்துவிட்டது.இந்த நிலப்பரீட்சைவேண்டாம்என கைவிட்டுவிட்டார் என் அத்திம்பேர். சீனிவாசய்யர் தன் பிள்ளைக்கு சாமர்த்தியம் போதாது என திட்ட அடுத்த வருடம் ஒன்றும் போடாமல் விட்டு விட்டார். நகையும் போய், நிலமும் போனதுதான் மிச்சம்.

வெகு நாள் வரை திராசும் படிக்கல்லும், அத்திம்பேர்  நிலச்சுவான்தார் என்பதை,கட்டியம் கூறிக்கொண்டிருந்ததும் ,அக்காவின் அர்ச்சனைக்கு அத்திம்பேரை ஆளாக்கிக்கொண்டிருந்ததும் தனிக்கதை.

    அலைகள் தொடரும்





No comments:

Post a Comment