Monday 8 February 2016

ஆறாவது அண்ணாவின் அரிய செயல்கள்

என் ஆறாவது அண்ணாவின் பெயர் ஜயராமன். நாங்கள் அவரை ஜயம் என்றே கூப்பிடுவது வழக்கம். சிறு வயது முதலே பெயருக்கு ஏற்ற மாதிரி ஜயராமனாய்  திகழ்ந்தவர். என் அம்மாவுக்கு,அவர் சிறுவனாய் இருந்த பொழுதுமுதல்,அவர் மேல் அபார நம்பிக்கை.கொடுத்த காரியத்தை
பொறுப்பாகவுும், திறம்படவும்  செய்துமுடிப்பார். தைர்யசாலியும்கூட. அதனால்என் அம்மா, அவருக்கு 15 வயதாயிருக்கும்பொழுதே, 25வயது பிள்ளையிடம் யோஜனை கேட்பதுபோல் கேட்பார். அவ்வளவு புத்திசாலி அவர். வீட்டை காலிசெய்யவேண்டுமா?  ஜயா அண்ணாஉதவியுடன்தான்.
உயர்ந்த பொருள் வாங்க வேண்டுமா ஜயாதான். லாரியில் சாமானுடன் செல்லவேண்டுமா ஜயாதான். ஆக ஜயராமனாய் விளங்கியவர் அவர்.பட்டப்படிப்புபெற்று பதவி உயர்வு அடைவது பெரியதல்ல,
SSLC படித்து, படிப்படியாய்  பல வித பரீட்சை எழுதி, பதவி உயர்வு பெற்று, chief accounts officer பதவி பெற்றார். பதவியில் இருக்கும்பொழுது, ரயில்வேயில் ஏகப்பட்ட சலுகைகள் உண்டு. வேலையில் நேர்மையும் கண்டிப்பும் மிக்கவர். மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவர், தன்னிடம் தப்பு இருந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனமுள்ளவர்.தம்பி தங்கையுடன் மிக்க பாசமுள்ளவர்.

              ஒரே பிள்ளைக்கு  நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்து, ஓய்வு பெற்றதும் பிள்ளையிடம், சேர்ந்து, ஒற்றுமையாய் இருப்பவர் .ஒருவர்கையையும் எதிர்பாராமல் தான் மற்றவர்க்குசெய்யும், நிலையில் இருப்பவர். மனதுக்கு விரோதமாய் ஒரு போதும் நடக்கமாட்டார்.
94 வயதிலும் துள்ளி எழுந்து நடமாடுபவர். அவரின் திறமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தான் என் ஜயா அண்ணா.

No comments:

Post a Comment