Monday 12 October 2015

வேலாயி (வேலைக்காரி) படுத்தும் பாடு.

 எங்கள் வேலைக்காரி பெயர் வேலாயி ஆனால் அவள் பரமசிவனின் நெற்றிக்கண்ணை தன்னிடம்
வைத்துக்கொண்டுவிட்டாளோ என தோன்றும். தான் ஒத்துக்கொண்ட வேலையைத்தவிர
தப்பித்தவரி கூட ஒரு வேலை செய்துவிட மாட்டாள். அது அவள் எடுத்துக்கொண்ட சபதம் போலும்.

          காரியத்தில் மட்டும் கணக்கல்ல, வேலைக்கு வரும் நேரமும் கணக்குத்தான். சரியாக 7 மணிக்கு வந்து விடுவாள்8.30 வேலையை முடிப்பாள், 10 நிமிடம் முன்னால் முடிப்பாளே தவிர
பின்னால் போகாது
.
         வேலைசெய்யும்போது நாம் பார்க்கிறோம் என்று பார்ப்பதில் படு கெட்டிக்காரி. அதற்கே அவளுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.இரண்டு வருட அனுபவத்தில் அவள் சிரித்து நான்
பார்த்ததில்லை .( அவளுக்கு பல் இருக்கா என எனக்கே சந்தேகம்) நாம் ஏதேனும் வேலை சொன்னால் முறைப்பாள். அவளுக்கு முறைப்பதும், குறைப்பதும், கை வந்த கலை.

         அவள் வந்ததும் ஏறிய Bpஅவள் சென்றபின் normal ஆகிவிடும். அடிக்கடி என் கணவர்
அவளை தலை முழுகு என்பார். நானும் தலை முழகுவேன் , தலைக்கு ஷாம்புப்போட்டு!!!
என் கணவர் அடிக்கடி சொல்லும் சொல் " நீ எனக்குக்கூட பயப்படுவதல்லை, வேலாயியிடம் பய பக்தியோடு இருக்கிறாய்". என்பார். நான் மனதிற்குள் சொல்லிக்கொள்வேன். " அவள்என்னை விட்டுப்போய்விடுவாள்" உங்களால் போகமுடியாதே !! என.


         வேலாயி மாதம் இரண்டு நாள் leaveஎடுப்பாள். அது அவள் கேட்டுக்கொண்ட condition.
சொல்லாமல் leave எடுக்க மாட்டாள். சொன்ன நாளில் மழையோ, வெய்யிலோ, புயலோ வந்து
விடுவாள். ஆனால் ஒவ்வொரு்நாளும்  மனதால் அவளை வேலையை விட்டு நீக்கி, மறு நாள்
வறவேற்பேன்.

        உங்களுக்கு யாராவது நல்ல வேலைக்காரி  தெரிந்தால் அனுப்புங்களேன். அப்படி
அனுப்புபவர்களுக்கு ஒரு பரிசு உண்டு. அந்தப் பரிசு இந்த வேலாயிதான்!!!!!


No comments:

Post a Comment